பக்கம்:பூமியின் புன்னகை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுழல் மாலை


• மேடையில் இருந்த பேசுவோர் பட்டியல்
அவையில் இருந்ததையும் விடவே அதிகம்
இலக்கிய மன்றச் செயலர் இருதய சாமி
வலக்கரத்தில் வாங்கி வந்ததோ ஒரேயொரு மாலை

கூட்டந் தொடங்குமுன் தலைவரை விளித்து
வாட்டமில் மாலையை மாணிக்க மாலையாய்த்
தலைவருக் கணிவித்தார் கூட்டத்திருந்த
சிலபேர் செய்தனர் பலமாய்க் கரகோஷம்

முதற்பேச் சாளருக்கும் வந்தது ஒருமாலை
முப்பதாவது பேச்சாளருக்கும் முழுசாய் ஒருமாலை
வாங்கி வந்ததோ ஒரேயொரு மாலை
முப்பது பேச்சாளருக்கும் முறை தவறாமல்

செப்பிடு மலர்மாலையை மாணிக்க மாலையாய்ச்
சாற்று வதாகச் சடங்குடன் பாந்தமாய்ப்
போட்டு மகிழ எப்படி வந்தன மாலைகள்?
எனக்குள் வியப்பு எனக்குள் மலைப்பு