பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பூர்ணசந்திரோதயம்-1 நின்று, புன்னகையும், பிரேமையும் குளிர்ந்த கிரணங்களாகச் சொரிந்த தங்களது சந்திரபிம்ப வதனங்களைப் பணிவாகவும், உருக்கமாகவும், மரியாதையாகவும் வளைத்துத் தங்களது அழகிய கைகளைக் குவித்து, நமஸ்கரித்து, 'வரவேண்டும்; வரவேண்டும்' என்று அந்தரங்கமான அன்போடு உபசரித்து வரவேற்று, விருந்தினர் இருவரையும் அழைத்துக்கொண்டு நிலைக் கண்ணாடி மண்டபத்திற்குப்போய் இரண்டு உன்னதமான ஸோபாக்களைக் காட்டி, அவற்றின்மீது அமர்ந்து கொள்ளும் படி உவப்போடு கூறி வேண்டிக்கொள்ள விருந்தினர் இருவரும் உள்ளங் குளிர்ந்தவராய் உட்கார்ந்து கொண்டனர். உடனே இளவரசர் சந்தோஷமும் புன்னகையும் வழிந்த முகத்தினராய் அன்னத்தை நோக்கி, "அன்னம் இன்றைய தினம் எவ்வளவு இருளாக இருக்கிறது பார்த்தாயா. பெட்டி வண்டிக்குள் தனியாக உட்கார்ந்து கொண்டு வருவது நிரம்பவும் கஷ்டமாக இருந்தது. ஆகையால், நம்முடைய மருங்காபுரி ஜெமீந்தாரையும் கூட அழைத்துக் கொண்டு வந்தேன். இவர் உனக்குத் தெரிந்த மனிதராகையால், இவர் இருப்பதைப்பற்றி நீ கொஞ்சமும் லஜ்ஜைப்படவே தேவையில்லை. இவரையும் என்னைப் போலவே நீங்கள் பாவிக்கலாம்” என்றார். அப்போதும் குவித்த கையை எடுக்காமலும், அடக்கிய மூச்சை அதிகமாக விடாமலும் வணக்கமாக நின்று கொண்டிருந்த அம்மன் பேட்டை அன்னம், அவரை நோக்கி, 'மகாராஜாவின் சித்தத்தின்படி நடக்க அடியாள் காத்திருக்கிறேன்' என்றாள். உடனே இளவரசர், "சரி, இன்றையதினம் என்னென்ன கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருக் கிறாய்?" என்று கேட்க, அன்னம், "முதலில் பாட்டுக் கச்சேரி யும், பிறகு கோலாட்டமும் நடத்த உத்தேசித்திருக்கிறோம். அதற்குமேலும் சாவகாசம் இருக்குமானால், கேளிக்கை