பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பூர்ணசந்திரோதயம்-1 சுருதி கூட்டினாள். அவர்களது தாயான அன்னம் வெள்ளித் தாம் பாளங்களில் வாசனைத் தாம்பூலாதி சாமான்களையும் கலவைச் சந்தனக் கிண்ணத்தையும் பன்னீர்ச் செம்பையும் ரோஜாவும் ஜாதியும் சேர்த்துக் கட்டப்பட்ட புஷ்பத்தையும் கொணர்ந்து இளவரசருக்கு அருகில் ஒன்றுமாக, ஜெமீந்தாருக் கருகிலொன்றுமாக வைத்துவிட்டுத் தனது கடைக்குட்டி மகளை நோக்க, அவள் சுருதி கூட்டப்பட்ட தனது பிடிலைக் கீழே வைத்துவிட்டு எழுந்துவந்து சந்தனத்தை எடுத்து இளவரசருக்குப் பூசிவிட்டுப் புஷ்பத்தை அவரது சிகையில் சூட்டிப் பன்னீர் தெளித்துவிட்டுச் செல்ல, அன்னம் தாம்பூல சாமான்களை எடுத்துக் கொடுத்து, வெற்றிலைச் சுருளை ஒவ்வொன்றாகக் கொடுத்துக்கொண்டே இருக்க, இளவரசர் கடைசிப் பெண்ணைப் பார்த்து நகைத்து, "என்ன , செல்லம்! இப்படி பந்திவஞ்சனை செய்யலாமா? எனக்குச் சந்தனம் பூசி எல்லாக் காரியத்தையும் செய்தவள் ஜெமீந்தாரை அலட்சியமாக விட்டுவிடலாமா? எங்கே பார்ப்போம், அவருக்கும் பூசிவிடு, நீ குழந்தை; அவர் உன்னுடைய தாத்தா; பரவாயில்லை' என்றார். மருங்காபுரி ஜெமீந்தார் சந்தோஷமாகக் கலகலவென்று நகைத்து, 'இல்லை, இல்லை; பாட்டுக் கச்சேரி நடக்கட்டும். நானே சந்தனம் பூசிக் கொள்ளுகிறேன். செல்லத்துக்கு ஏன் தொந்தரவு கொடுக்கிறீர்கள் என்று கூறித் தாமே சந்தனம், புஷ்பம், தாம்பூலம் முதலியவற்றை எடுத்து அணிந்து கொண்டார். சந்தனத்தின் பரிமள கந்தமும், புஷ்பத்தின் மணமும் அந்த மண்டபம் முழுதும் சூழ்ந்து கமகமவென்று கமழ்ந்து எல்லோரையும் ஆனந்தசாகரத்தில் ஆழ்த்தின. அவர்கள் இருவரும் பூரித்துப் புளகாங்கித மடைந்து மிகவும் குதுகலமாக வீற்றிருந்த சமயத்தில் மடந்தையர் ஐவரும் தத்தம் வாத்தியங்களுக்குச் சுருதிகூட்டி வாசிக்கத் தொடங்கினர். தம்புராவை வைத்திருந்த அம்மாளு என்னும் மூத்தபெண் கோகிலத்வனியைப் பழித்த குரலைக் கிளப்பி