பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 87 அப்போது மருங்காபுரி ஜெமீந்தார் இளவரசரை நோக்கி, "இவ்வளவுநேரம் உட்கார்ந்திருந்ததனால் எனக்குக் கொஞ்சம் தலைவலி உண்டாகியிருக்கிறது. நான் போய், கொஞ்சம் பால் சாப்பிட்டு விட்டு ஒரு பக்கமாகப் படுத்துக் கொஞ்சம் துரங்குகிறேன். நாம் புறப்பட்டுப் போகவேண்டிய சமயத்தில் யாராவது வந்து என்னை எழுப்பட்டும்” என்றார். உடனே இளவரசர் அன்னத்தை நோக்கி, ‘சரி, நீ இவரை அழைத்துக்கொண்டுபோய் இவருக்கு வேண்டியவை களைக் கொடுத்து நல்ல சுகமான ஒரு படுக்கையில் படுக்கச் செய்து விட்டு வா; அதற்குள் நாங்கள் கொஞ்சம் விளையாடு கிறோம் என்றார். அதைக் கேட்ட அன்னம் அப்படியே செய்வதாகக் கூறி மருங்காபுரி ஜெமீந்தாரையும் அழைத்துக் கொண்டு அப்பால் போய் விட்டாள். மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் அன்னத்திற்கும் அதற் குமுன் பழக்கமில்லையென்று இளவரசர் நினைத்திருந்தார். ஆனால் உண்மையில் அவர்களிருவருக்கும் அந்தரங்கமான சிநேகம் எவருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. ஆகவே, தாம் அந்தக் கும்பலில் குதுரகலமாக இருக்கமாட்டாமல் தவித்திருந்ததைவிட அன்னத்தோடு தனியாகப் போவதைப் பற்றி ஜெமீந்தார் பரமசந்தோஷம் அடைந்தவராய், அவ்விடத்தைவிட்டு அப்பால் நடந்தார். அவ்வாறே அதுவரையில் இளவரசரையும், அந்தப் பெண் பாவையரையும் பீடித்திருந்த கிலேசமும் உடனே விலகியது. பெண்களோடு தனிமையில் விடப்பட்ட இளவரசர் புதிய ஊக்கமும், உற்சாகமும், குதூகலமும், மகிழ்ச்சியும் அடைந்தவராய்ப் புன்னகை தவழ்ந்த இளக்கமான முகத்தோடு மூத்த பெண்ணைப் பார்த்து, 'அம்மாளு! நீங்கள் பாடியது போதும். இப்படி வாருங்கள் என்று அழைக்க அந்த மடந்தையர் ஐவரும், மிகுந்த சந்தோஷமும் குதூகலமும்