பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 89 பள்ளிக்கூடத்துச் சிறுவன் எவ்வளவு குதூகலமாகவும், சந்தோஷத்தோடும் விளையாட்டில் இறங்குவானோ, அதுபோல இளவரசர் அதிபாலியராக மாறி அந்தப் பெண்மான் களின் இடையே புலிபோலப் புகுந்து வேட்டையாடத் தொடங்கினார். அவர் யாரையாவது ஒருத்தியைப் பிடித்துக் கொண்டால், அவ்வளவோடு தமது குருட்டு உத்தியோகம் தமக் கில்லாமல் போய் விடுமென்கிற எண்ணங் கொண்ட இளவரசர் எவரையும் பிடித்துக்கொள்ள விரும்பவில்லை. அந்தப் பெண்கள் அதிக தூரத்தில் போய் விடாமல், அவரது பக்கங்களிலும் பின் பக்கத்திலும் உராய்ந்து கொண்டு நின்று, அவரைத் தொடுவதும், பிடித்திழுப்பதும், மெதுவாகக் குட்டுவதும், அவர் தமது கையை நீட்டிப் பிடிக்க முயன்றால், கலகலவென்று இனிமையாக நகைத்துக்கொண்டு அப்பால் நகர்ந்து கை கொட்டிப் புரளி செய்வதுமாக இருந்தனர். அடிக்கடி அவர்களுக்குள் ஒருத்தி அவரது கையில் அகப்பட்டுக்கொண்டே இருந்தாலும், அவளை அவர் இறுகப் பிடித்துப் பிரியமாக மார்போடணைத்து முத்தமிட்டு மெதுவாக நழுவ விட்டுவிடுவார். அவள் தப்பித்துக்கொண்டு அப்பால் போய் விடுவாள். அவ்வாறு அந்தத்தோகை மடமயிலாரது கும் பலில் இளவரசர் புகுந்து கட்டிப்பிடித்துக் குருடனைப் போல நடித்துச் சரச லீலைகள் புரிந்த காட்சி மகா அற்புதக் காட்சியாகவும், ஐம் புலன்களையும் வென்று உலகைத் துறந்த தபோதனர்களையும் மோகலாகிரி கொள்ளத் தகுந்த மனமோகனக் காட்சியாகவும் இருந்தது. இளவரசருக்கு அந்த விளையாட்டு மிகவும் வேடிக்கையாகவும் சந்தோஷ கரமாகவும் இருந்தமையால், அவர் பத்து வயதுக் குழந்தைபோலத் தம்மை மறந்து ஓடி விளையாடுகிறார். பூத் தொட்டிகளையும், ஸோபாக்களையும், கண்ணாடி களையும் உடைத்துவிடாமல் ஜாக்கிரதையாகத் தடவிக் கொண்டே அவர் அவர்களைப் பிடிக்க முயல, அவர்கள், கைவளையல்களும் காலிலிருந்த சலங்கைகளும் கலீர்