பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 91 களைக் காட்டி நகைத்த வண்ணம் மூலைக் கொருவராக உட்கார்ந்து கொண்டனர். ஒருத்தி அந்த மண்டபத்துக் கதவுகளின் தாளை விலக்கி முன்போலத் திறந்து வைத்தாள். அப்போது கடிகாரத்தில் மணி சரியாக இரண்டடித்ததை உணர்ந்த இளவரசர், 'அடி அம்மாளு நாங்கள் புறப்பட்டுப் போக வேண்டும். அன்னத்தைக் கூப்பிடு. ஜெமீந்தாரையும் எழுப்பி அழைத்துக்கொண்டு வரச்சொல்' என்று மூத்தவளை நோக்கிக்கூற அவள்போய்த் தனது தாயையும், ஜெமீந்தாரையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்தாள். இளவரசர் தாம் கொணர்ந்திருந்த விலையுயர்ந்த சில ஆபரணங்களை அன்னத்தினிடத்தில் கொடுத்துவிட்டு தமக்கு நேரமாகிற தென்று சொல்லி விடைபெற்று ஜெமீந்தாரையும் அழைத்துக் கொண்டு மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி, வாசலில் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த பெட்டி வண்டிக்குள் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டு ராஜபாட்டை வழியாகத் தஞ்சையை நோக்கிச் சென்றது. உள்ள்ே இருந்த இருவரைத் தவிர, வண்டியின் முன்பக்கத்தில் சாரதி ஒருவனும், பின்பக்கத்தில் காசாரி ஒருத்தனும் ஆக இருவரே இருந்தனர். அந்த இரவு மிகவும் இருண்டிருந்தது. ஆகாயத்தில் மேகங்களும் அடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருந்தன. காற்று விசையாக மோதி மழை பெய்யாமல் தடுத்துக்கொண்டிருந்தது. பெட்டி வண்டியின் முன்பக்கத்திலிருந்த பிரகாசமான இரண்டு லாந்தர்களின் வெளிச்சத்தினால் குதிரைகளிரண்டும் வழியை அறிந்துகொண்டு நாற்கால் பாய்ச்சலில் ஓடின. உட்புறத்தில் இருந்த இளவரசரும் ஜெமீந்தாரும் அம்மன் பேட்டை அன்னத்தின் மாளிகையில் நடந்த பாட்டுக்கச்சேரி, கோலாட்டம் முதலிய வற்றைப் பற்றி வேடிக்கையாக சம் பாஷித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குப் பூர்ணசந்திரோதயத்தின் நினைவும் அவளை வெல்வதற்காகத் தாங்கள் ஏற்படுத்தியுள்ள பந்தயத்தைப் பற்றிய நினைவும் உண்டாயின. அன்றைய தினம்