பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பூர்ணசந்திரோதயம்-1 கலியாணபுரத்து மிட்டாதார் அவளிடத்திற்குப் போனாரோ இல்லையோ என்பதையும், அவருக்கு ஜெயமுண்டாயிற்றோ அபஜெயம் உண்டாயிற்றோ என்பதையும் அறியத் தாம் ஆவல் கொண்டிருப்பதாக இளவரசர் கூறிக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில், சாலையின் ஒரத்திலிருந்த மரங்களின் மறைவிலிருந்து சரசரவென்று ஒசையுண்டானதைக் கேட்ட அவர்கள் இருவரும் திடுக் கிட்டு, அந்த ஓசை உண்டான இடத்தை நோக்கினர். அவர்களது உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்த்து நிற்க, அதோடு பேரச்சம் அவர்களது உடம்பு முழுதும் பரவியது. அடுத்த நிமிஷத்தில் பனைமரங்கள் போலவிருந்த நாலைந்து முரட்டு மனிதர்கள் குபிரென்று வண்டியின் மீது பாய்ந்தனர். குதிரையின் முகத்தில் படேரென்று ஒர்அடி விழுந்தது; குதிரை துள்ளிக் குதித்து சடேரென்று பின்னுக்கு வாங்க, வண்டிக்குள் முன்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜெமீந்தார் தமக்கு எதிர் முகமாக உட்கார்ந்திருந்த இளவரசரின் மீதுபோய் வீழ்ந்து மோதினார். உடனே வண்டி நின்றுபோய் விட்டது. முன் பக்கத்திலிருந்த சாரதியும், பின் பக்கத்திலிருந்த காசாரியும் கட்டப்பட்டுத் தரையில் உருட்டி விடப்பட்டனர். அவர்களது வாயில்துணிப்பந்து அடைக்கப்பட்டுப் போனதாகையால், அவர்கள் பேசமாட்டாமலும், மூச்சுவிடமாட்டாமலும் திணறித் தத்தளிக்கின்றனர். வண்டியின் இரண்டு பக்கங்களிலுமிருந்த கதவினண்டையில் இரண்டிரண்டு முரட்டாள்கள் வந்து நின்றனர். அவர்களது முகங்கள் முகமூடியால் மறைக்கப் பட்டிருந்தன. கண்களிற்காக விடப்பட்டிருந்த தொளைகள் தவிர, மற்ற பாகமே தெரியாமலிருந்தது. அவ்வாறே திடீரென்று வந்தவர்கள் வழிப்பறி செய்யும் கொள்ளைக் காரர்களென யூகித்துக் கொண்ட இளவரசர் துணிவாகப் பேசத் தொடங்கி, 'அடா துஷ்டப் பயல்களா என்ன வேலை இது? நான் யாரென்று அறிந்து கொண்டீர்களா? என்று அதட்டிக் கூறினார். அவருக்கு அருகில் நின்றவனும், அந்த