பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 முரட்டாள்கள் யாவரிலும் பெரியவனாகத் தோன்றியவனுமான ஒருவன் தனது கையிலிருந்த கைத்துப்பாக்கியை அவருக் கெதிரில் நீட்டி, "வாயைத் திறந்து பேசினால், உடனே உங்கள் இருவரையும் சுட்டுக்கொன்று விடுவோம்'என்று அதட்டிக் கூறினான். உடனே இளவரசர், 'அடா திருட்டுநாயே! நான் இந்தத் தேசத்து ராஜாமகனென்பது உனக்குத் தெரியவில்லையா? என்னைக் கூட வழிமறித்துக் கொள்ளை யடிக்கும்படியான அவ்வளவுதுணிவு உங்களுக்கு உண்டாகிவிட்டதா? ஜாக்கிரதை; கிட்ட வரவேண்டாம்” என்று கூறி அவனை மிரட்டிப் பார்த்தார். அவன் அந்த வார்த்தையை இலட்சியம் செய்யாதவனாய், 'நீங்கள் ராஜாமகனென்பது எங்களுக்குத் தெரியும். அதனாலேதான், உங்கள் உடம்பில் அடிவிழாமலிருக்கிறது. வேறே மற்றவர்களாக இருந்தால், நாங்கள் முதலில் அடித்துவிட்டுத்தான் பிறகு பேசுகிறது வழக்கம். நீங்கள் வாய் திறக்காமல் இருந்தால், உங்களுக்கு ஒரு துன்பமும் உண்டாகப் போகிறதில்லை. வாயைத் திறந்தால் ராஜாமக னென்பதைக் கூட நாங்கள் மறந்து விடுவோம்’ என்றான். அந்தப் பயமுறுத்தலான வார்த்தையைக் கேட்ட இளவரசர், அதற்குமேல் பேசுவது தவறென நினைத்துத் தமது வாயை மூடிக்கொண்டார். உடனே அந்த வண்டியின் ஒரு பக்கத்துக் கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கட்டப்பட்டு ராஜபாட்டையில் கிடந்த சாரதி காசாரி ஆகிய இருவரையும், அந்த முரட்டாள்கள் தூக்கிக்கொணர்ந்து பெட்டிவண்டிக்குள் திணித்துவிட்டுக் கதவை மறுபடியும் மூடித்தாளிட்டனர். அந்த முரட்டு மனிதர்களின் தலைவனான கட்டாரி என்பவன் உடனே இளவரசரைப் பார்த்து, 'குதிரைக் காசாரியையும் வண்டி ஒட்டுகிறவனையும் உள்ளே வைக்கிறதைப்பற்றி, மகாராஜா கோபித்துக் கொள்ளக்கூடாது. கொஞ்சதூரம் போகிறவரையில்