பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பூர்ணசந்திரோதயம்-1 இவர்களும் இங்கேயே இருக்கட்டும். அதோடு ஜன்னலின் கதவுகளையும் மூடி உள்ளேயிருக்கும் திரையையும் விட்டுவிட வேண்டும் என்று கூறியவண்ணம் இரண்டு பக்கங்களிலு மிருந்த திறப்புகளிற்குள்ளே இருந்த திரைகளைப் பிரித்துத் தொங்கவிட்டு பக்கப் பலகைகளையும் இழுத்து நன்றாக மூடிவிட்டான். உடனே வண்டியின் உட்புறமெல்லாம் ஒரே இருளாகச் சூழ்ந்துகொண்டது. அந்த முட்டாள்கள் தங்களுக்கு எவ்விதமான துன்பம் செய்யப் போகிறார்களோ என்ற அச்சம் கொண்டவர்களாய், இளவரசரும், ஜெமீந்தாரும் பெருத்த திகில் கொண்டு நடுநடுங்கி மெளனமாக உட்கார்ந்திருந்தனர். அடுத்த நிமிஷத்தில் பெட்டிவண்டி போகத் தொடங்கியது. அந்த முரட்டாள்களெல்லாரும் வண்டியின் நாற்புறங்களிலும் கூண்டின்மேலும் உட்கார்ந்தும் தொற்றிக்கொண்டும் இருந்தனர். ஒருவன்சாரதியாக அமர்ந்து, வண்டியை விசையாக ஒட்டிக்கொண்டு சென்றான். வண்டியின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டு போயின. இருளில் அந்த வண்டியில் யார் இருக்கிறார்கள் என்பதே எவருக்கும் தெரியக்கூடாதென்ற எண்ணத்தோடு அவர்கள் அவ்வாறு விளக்குகளையும் அவித்துவிட்டனர். அவ்வாறு பெட்டிவண்டி அம்மன்பேட்டையிலிருந்து தஞ்சைக்கு வந்த ராஜபாட்டையிலேயே நெடுந்துரம் வந்து அதன் பிறகு வேறே ஏதோ ஒரு வழியாகத் திரும்பி எங்கேயோ போவதாகத் தோன்றியது. அவ்வாறு இரண்டு நாழிகை நேரம் சென்றபின்வண்டி ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. பக்கத்திலிருந்த ஒரு மாளிகையின் முன்புறக் கதவுகள் திறக்கப்பட்டதன் ஒசை உண்டாயிற்று. வண்டி அதற்கு மேலும் செல்லத் தொடங்கியது. சக்கரங்கள் கருங்கல் பதிக்கப்பெற்ற தரையில் கறகறவென்று ஒசையோடு சென்றது. வெளிக்கதவுகள் மறுபடியும் மூடிப் பூட்டப்பட்டன. அப்படிச் சென்றது ஒரு பங்களாவின் முன்புறத்தோட்டம் போலத் தோன்றியது. அவர்கள் தங்களை எங்கே கொண்டு