பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பூர்ணசந்திரோதயம்-1 அவ்விடத்திலிருந்த லாந்தரை எடுத்துக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு பக்கமாகப் போய்த் திரையைக் கொஞ்சம் விலக்கிப் பிடித்துக் கொண்டு, 'சரி; மகாராஜா இப்படி வரட்டும்' என்றான். உடனே இளவரசர் திரைக்கு அப்பால் சென்றார். கட்டாரித்தேவன் திரையை மறுபடியும் முன்போல மூடிவிட்டு லாந்தரும் கையுமாக அவரோடு அப்பால் கடந்தான். மருங்காபுரி ஜெமீந்தாரும் மற்றவரும் இருந்த இடம் ஒரே இருளாக நிறைந்து போய்விட்டது. திரைக்கு அப்பால் சென்ற கட்டாரித்தேவனும், இளவரசரும் அவ்விடத்தில் காணப்பட்ட மேன்மாடப் படிகளின்மீது ஏறிச் சென்றனர். அந்தப் படிகளும், கைப்பிடிச் சுவர்களும், கறுப்புத் துணிகளால் உறை போடப்பட்டிருப்பதுபோல, அவற்றின் அடையாமே தெரியாதபடி மறைக்கப்பட்டிருந்தன. அவ்வாறு எங்கும் ஒரே கறுப்புத்துணியாக இருந்ததைக் காண, அதன் கருத்து இன்னதென்று உணர்ந்துகொள்ள மாட்டாத இளவரசர் கரைகடைந்த சஞ்சலமும் கலக்கமும் பிரமிப்பும் கொள்ளலானார். அவரது முடி முதல் அடிவரையிலுள்ள உரோமமெல்லாம் சிலிர்த்து நின்றது. அவர் கட்டாரித் தேவ னைப் பார்த்து, 'இதென்ன விநோதம்! எங்கே பார்த்தாலும் வீட்டின் உருப்படியே தெரியாமல் கறுப்புத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்கிறதே! விஷயம் இன்னதென்று சொல்லி விடேன்? என்றார். அதைக்கேட்ட கட்டாரித்தேவன், நீங்கள் என்னிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதில் உபயோகமில்லை. வாயைத் திறக்காமல் என்னோடுகூட வருவதைத் தவிர நீங்கள் வேறு எதையும் செய்யவும் கூடாது. கேட்கவும் கூடாது' என்று கண்டிப்பாக மறுமொழி கூறினான். அதைக் கேட்ட இளவரசர் ஒருவாறு கலகலத்துப் போய்விட்டார். ஒருகால் அந்த முரட்டு மனிதர்களின் தலைவனாகிய வேறு எவனிடத்திலாகிலும் தம்மை அவன்