பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 அழைத்துக்கொண்டு போகிறானோ என்ற ஒரு நினைவு இளவரசரது மனதில் தோன்றியது. அவர்களது தலைவர் யாராக இருப்பானென்றும், தாம் இளவரசரென்பதை உணர்ந்திருந்தும், அந்த முரட்டு மனிதர்கள் தம்மை அந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டிய முகாந்திரம் என்னவாக இருக்குமென்றும் பலவிதமாக எண்ணமிட்டவராய் இளவரசர் அந்த மேன் மாடப் படியில் ஏறிச்சென்று அதன் உச்சியை அடைந்தார். அவ்விடத்தில் ஒரு கறுப்புத் திரை தொங்கிக்கொண்டிருந்தது. கட்டாரித்தேவன் - இளவரசரை நோக்கி, "திரைக்கு அப்பால் போங்கள்' என்று கூறிய வண்ணம் அதைக் கொஞ்சம் ஒதுக்கிப் பிடித்துக் கொண்டான். இளவரசர் அவனது சொல்லை மீறுவதில் பயனில்லை என்பதை உணர்ந்ததன்றி, அவர்களது விநோத நடவடிக்கையின் முடிவு இன்ன தென்பதை அதி சீக்கிரத்தில் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் கொண்டவராக இருந்தாராகையால், அவனது விருப்பப்படி அவர் திரைக்கு அப்புறம் சென்றார். திரைக்கு அப்புறத்தில் மூடப்பட்டிருந்த ஒரு கதவு இருந்தது. கதவிற்கும் திரைக்கும் நடுவில் இளவரசரை நிறுத்தித் தான் திரைக் குவெளியில் நின்றுகொண்டிருந்த கட்டாரித்தேவன், "மகாராஜா கதவைத் திறந்து கொண்டு தைரியமாக உள்ளே நுழையுங்கள்' என்று கூறினான். அதைக் கேட்ட இளவரசர் கதவின்மீது கை வைக்கவே, அது சரேலென்று திறந்து கொண்டது. உட்புறத்தில் கோடி சூரியப் பிரகாசம் போல விளக்குகள் பளிச்சென்று பிரகாசித்தன. மகா அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு சயனக்கிரகம் எதிரில் காணப்பட்டது. அவ்விடத்திலிருந்த ஒரு லோபாவின் மீது மகா புதுமையான அழகோடு ஜெகஜ் ஜோதியாகவும் உல்லாலமாகவும் சாய்ந்திருந்த ஒரு யெளவனப் பெண் பாவையை இளவரசர் கண்டு திக் பிரமை கொண்டு கலங்கி அப்படியே நின்றார்.