பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 101 லாமேயன்றி கையினால் தொட்டுப் பார்ப்பதற்கு வஸ்துவே இல்லாமல் இருந்தது. தங்கப் பதுமை போல சிருஷ்டிக்கப் பட்டிருந்த அவளது அற்புதமான சரீரம் அந்த மகா நுட்பமான ஆடைக்குள்ளிருந்தது, வெண்மையான மேகத்தினால் சூழப்பட்டு அப்படியே வெளியில் தெரியும் கந்தருவ ஸ்திரீயின் தேகம்போலவும், பளிங்கெனத் தெளிந்த தண்ணிரில் நீராடும் பெண்பாலாரின் சரீரம் போலவும் காணப்பட்டது. அந்த சல்லாய்ப் பட்டின் ஒரங்களில் எல்லாம் கறுப்புப் பட்டினாலும் ஜரிகையினாலும் பூவேலைகள் செய்யப்பட்டிருந்தன. அந்தச் சேலையின் உடலில் துரதுரமாகச் சிவப்புப் பட்டினாலும், ஜரிகையினாலும் ரோஜாப் புஷ் பங்கள் நெய்யப்பட்டிருந்தன. அந்தத் தோகைமயிலாள் தனது சேலையின் தலைப்பைத் தலையின் பின்புறமாகக் கொணர்ந்து, அழகாக முக்காடிட்டிருந்ததும், வைரக்கற்கள் நிறைந்த லரங்களை நெற்றிக்குமேலும் தலை முடிச்சிற்கு மேலும் சேர்த்துக் கட்டி அலங்கரித்திருந்ததும், நெற்றியில் செஞ்சாந்துத் திலகமிட்டிருந்ததும், அவளது இடையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் அணிந்திருந்ததும், தந்தம் போன்ற அழகிய பாதங்களில், ரோஜாப்பூக்கள் நிறைந்த வெல்வெட்டு சிலிப்பரை அணிந்திருந்ததும் ஒன்றுகூடி அவள் முடிதரித்த மண்டலேசுவரியோ, அல்லது ரதிதேவியின் செருக்கை அடக்கவந்த ஒரு புதிய மோகனசிருஷ்டியோவென ஐயமுற்றுப் பிரமிக்கும் படி செய்தன. அவளது சுந்தர வதனத்தில் எவருக்கும் இல்லாத களையும், ஜொலிப்பும், வசீகரமும், கவர்ச்சியும் ஏராளமாக நிறைந்து ஒரே பார்வையில் ஆடவரது உயிரைக்கொள்ளை கொண்டன. அவ்வாறு அபார சிருஷ்டியாகக் காணப்பட்ட அந்தப் பேடன்னம் வீற்றிருந்த அறையின் அலங்காரம் நவராத்திரிக் கொலுவில் அரசர்களது கொலுமண்டபம் எவ்வித அலங்காரத்தோடு இருக்குமோ அப்படியே காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் படங்களும், நிலைக்கண்ணாடிகளும்,