பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 103 வியப் பையாவது அச்சத்தையாவது காட்டவும் இல்லை. ஆனால் அவளது முகத்தில் ஒரு வித இளக்கமும் ஆனந்தமும் பரவத் தொடங்கின. ஆகையால், ரோஜாப் புஷ்பம்போன்ற செந்நிறம் அவளது முகத்திலிருந்து உடம்பு முழுவதும் பரவி, அவளது மனவெழுச்சியை நன்றாகக் காட்டியது. அப்படியிருந்தும், அவள் அவர்மீது செலுத்திய பார்வையை விலக்காமலே இருந்தாள். கரைகடந்த மோகவிகாரம் கொண்டு உருகுகிறவள் போல, அவளது கண்களும் முகமும் உடம்பும் மிகுந்த இளக்கத்தையும் ஆவலையும் காண்பிக்கவே, அவளது நிலைமையை உணர்ந்த இளவரசர் பிரம்மாநந்த சுகத்தில் கிடந்து மிதப்பதாகக் கனவு காண்பவர்போல அவளது அழகில் அப்படியே லயித்துப்போய் நின்றார். அடுத்த நிமிஷத்தில் அந்தப் பெண்பாவையின் அதரங்களில் புன்னகை பூத்துத் தனது மனத்திலுள்ளமையலின் பெருக்கையும், தனது ஆத்திரத்தையும் ஆவலையும் பல் வரிசைகளின் கண்கொள்ளா வனப்பை யும் வெளிப்படுத்தி ஆயிரம் நாக்குகள் கொண்டு அவரை அழைப்பது போலத் தோன்றியது. - அதைக் கண்ட இளவரசர் அதற்குமேல் சும்மா நிற்கமாட்டாதவராய், அவள் யாரென்பதையும், அவர்கள் தம்மை அவ்விடத்தில் கொணர்ந்துவிட்ட காரணம் என்னவென்பதையும், தம்மை அழைத்து வந்த மனிதரிடத்தில் கேட்டு உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நினைவைக் கொண்டவராய், சடக்கென்று பின்புறம் திரும்பித் திரையைத் தூக்கிப் பார்க்க, அந்த முரட்டு மனிதன் காணப்படவில்லை. ஆகவே, அந்த முரட்டு மனிதன் அந்த வடிவழகியோடு தனிமையிலிருக்கும் பொருட்டு தம்மை அவ்விடத்தில் விட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டான் என்பதை இளவரசர் உடனே யூகித்துக் கொண்டார். இன்னதென்று சொல்லமுடியாத ஒருவித அச்சம் சிறிது நேரம் வரையில் அவரது மனதில் குடிகொண்டது. அவர்கள்