பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 105 கொண்டார். அந்த மின்னாள் மறுபடியும் பேசத் தொடங்கி, மண்ணுலகத்துக்கு எல்லாம் மகாராஜாக்களே தெய்வமென்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையால் எங்களுக்கெல்லாம் பேசும் தெய்வமும், வரம் கொடுக்கும் தெய்வமும் தாங்களாக இருந்தும், மனித ஜென்மத்தில் இரண்டாவது படியான கேவலம் பெண் ஜென்மம் எடுத்துள்ள என்னைப் பார்த்துத் தாங்கள் பெண் தெய்வமென்று இவ்வளவு அபாரமான பெருமை கொடுப்பது தகுமா? தகா விட்டாலும், ஒரு தெய்வம் பார்த்து, இன்னொரு மனிதனைத் தெய்வத்தின் நிலைமைக்கு உயர்த்திவிட்டால், அந்த மனிதர் அதை வகிக்காமல் விலக்க அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது . ஆகையால் தாங்கள் அருளிய பெருமையை நிரம்பவும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டேன். ஆனால், தாங்கள் பேசிய வார்த்தையில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலில் நான் யார் என்று கேட்டீர்கள்; பிறகு தங்களுக்கு வேண்டிய வரங்களை யெல்லாம் இந்தத் தெய்வம் கொடுக்குமா வென்று சந்தேகப்பட்டீர்கள். நான் யாரென்பது மிகவும் ரகசியமான விஷயம் ஆதலால், அதை மாத்திரம் வெளியிடும் படி தாங்கள் என்னை வற்புறுத்தக் கூடாது. தாங்கள் இரண்டாவதாகக் கேட்டதான வரங் கொடுக்கும் விஷயத்தில் நான் என்ன சொல்லப் போகிறேன். பக்தர்களுடைய பரிபக்குவ நிலைமைக்கும் மனோவுறுதிக்கும் தகுந்தபடி தெய்வம் வரங்களைக் கொடுக்குமென்பது தங்களுக்குத் தெரியாத சங்கதியல்ல. ஆகையால், அதைப் பற்றித் தாங்கள் ஏன் சந்தேகப்பட வேண்டும்' என்று பாகோ, தேனோ, அமிர்தமோவென இனித்த குரலால் பேசினாள். அதைக் கேட்ட இளவரசர் அவளது விநயத்தையும் புத்தி நுட்பத்தையும் கண்டு, மட்டுக்கடங்கா மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைந்தவராய் மிகவும் உருக்கமாகவும் பிரேமை யோடும் அவளை நோக்கி, "நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் நீ மனிதப் பிறப்பைச் சேர்ந்தவளல்ல