பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பூர்ணசந்திரோதயம்-1 வென்பதையும், தெய்வாம்சமாகப் பிறந்தவள் என்பதையும் நன்றாக நிரூபிக்கிறது. ஆகவே, இப்பேர்ப்பட்ட வழிப்பறி நடத்தும் கள்வரோடு நீ சம்பந்தப்பட்டவளல்ல என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இருந்தாலும் என்னை இங்கே பலவந்தமாகக் கொண்டுவந்த மனிதர்கள் யாராக இருக்கலாமென்பது எனக்கு இன்னமும் நிச்சயமாகத் தெரியவில்லை' என்றார். அதைக் கேட்ட அந்தப் பார்சீ மடந்தை கைகுவித்துக் குனிந்து அவரை வணங்கி, 'மகாராஜா கோபித்துக் கொள்ளக்கூடாது; தங்கள் விஷயத்தில் நாங்கள் பெருத்த அபராதியாகி விட்டோம். எல்லாவற்றையும் மகாராஜா மறந்து rமித்துக் கொள்ள வேண்டும் ' என்று நயமாகவும் பணிவாகவும் பிரியமாகவும் கூறி வேண்டிக் கொண்டாள். அதைக்கேட்ட இளவரசர் அவளது சுந்தர வதனத்தை உற்று நோக்கி, மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் கொண்டவராய், "பெண்ணே உன்னை உத்தேசித்து நான் எதையும் rமித்துக் கொள்ளுவேன் என்பதை நீ நிச்சயமாக நம்பலாம். அது போகட்டும். என்னை உன்னிடத்தில் அழைத்து வருவதற்கு, நீ இப்படிப்பட்ட தந்திரம் செய்ய வேண்டிய காரணமென்ன?” என்று வினவினார். உடனே அந்தப் பெண்பாவை மிகுந்த வெட்கமும் நாணமும் அடைந்தவளாய்க் கீழே குனிவதும் அவரை உருக்கமாகப் பார்ப்பதும் தனது மனதை வெளியிட மாட்டாமல் இரண்டொரு நிமிஷம் தத்தளித்து, அவரது முகத்தை ஆசையோடு பார்த்து ஏதோ சொல்ல முயல்வதும், உடனே கிலேசமுற்றுக் கீழே குனிவதுமாக இருந்து, கடைசியில் வாயைத் திறந்து, "மகாராஜா கேட்ட கேள்விக்கு நான் எப்படி மறுமொழி சொல்வதென்பது எனக் கே தெரிய வில்லை. காதலுக்குக் கண்ணில் லை என்று ஜனங்கள் பழமொழி சொல்லுவார்கள். கண் என்றால் அகக்கண் புறக்கண்