பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 113 அவளது அபூர்வமான வரலாற்றைக் கேட்ட இளவரசர் ஆச்சரியமும் பூரிப்பும் புளகாங்கிதமும் அடைந்தவராய் இனிமையாய் புன்னகை செய்து, 'ஆகா! என்ன ஆச்சரியம்! மன்னாதி மன்னர்களான மண்டலேசுவரர்களுக்கும், தேவர்களுக்கும், மூவர்களுக்கும் கிடைக்காத நிதிக் குவியலான இப்படிப்பட்ட ரதிதேவி இந்த ஒன்றரை வருஷகாலமாக என்னை அடையத் தவம் புரிவதென்றால் என்னுடைய பாக்கியத்தை என்னவென்று சொல்வது இருந்தாலும், இந்த ஒன்றரை வருஷகாலமாக இந்தச் சங்கதி என்னுடைய காதுக்கு எட்டாமல் போனது என்னுடைய துர்ப்பாக்கியமென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இந்த விஷயம் மாத்திரம் எனக்கு எட்டியிருந்தால் நான் அடுத்த நிமிஷத்தில் உன்னிடத்திற்கு வந்து சேர்ந்து உனது கவலையையும் துயரத்தையும் தீர்த்துவைத்து என்னைப் பலவந்தமாகக் கொண்டுவந்ததான இந்தத் துன்பமும் உனக்கில்லாமல் செய்திருப்பேன். என்னிடத்தில் கைம்மாறு கருதாமல் இவ்வளவு பிரமாதமாக என்னைக் காதலித்து உருகி என் பொருட்டு தாய்தகப்பன்மாரையும் ஏராளமான ஐசுவரியத்தை யும் உல்லங்கனம் செய்து, தனது உயிரையும் இழக்க உறுதி கொண்டிருக்கும் அருங்குணமணியான உன்னை அடைந்து சுகப்படுவதைவிட மேலான இன்பம் இந்த மண்ணுலகி லாவது விண்ணுலகிலாவது இருக்கப் போகிறதா? ஒரு காலும் இல்லை. நீ எந்த ஜாதியிற் பிறந்தவளாக இருந்தாலும், அதைப்பற்றிக் கவலை இல்லை. ஒருவருக்கொருவர் மாறாத காதலுண்டாகிவிடுமானால் ஜாதி, மதம் முதலிய எந்த வேறுபாடும் பறந்து போய்விடும். ஆகையால், உன்னுடைய அற்புதமான அழகையும், நற் குணத்தையும், புத்திசாலித் தனத்தையும், நீ என்மேல் வைத்திருக்கும் நிகரில்லாத பிரியத்தையும் கண்டு உன்னுடைய வரலாறுகளை யெல்லாம் கேட்க, இதுவரையில் வேறு எவர் விஷயத்திலும் உண்டாகாத அவ்வளவு அதிகமான பிரியமும், மோகமும் என் மனசில் பூ.ச.1-9