பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 115 என்பது வாஸ்தவந்தான். இன்னமும் நான்கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு சிறிய சங்கதி இருக்கிறது; அதை மாத்திரம் தாங்கள் செய்துவிட்டால், அதுவே போதும்; நான் உடனே தங்களுக்கு மனைவியாகி விடுகிறேன்' என்றாள். அதைக்கேட்ட இளவரசர் தமது ஆவேசத்தில் தம்மையும் உலகையும் மறந்தவராய், 'கண்ணே! உனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுத்துவிட ஆக்ஷேபனை இல்லை; என்னுடைய உயிர்வேண்டுமா? அல்லது, இந்த ராஜ்ஜியத்தை உனக்குப் பட்டங்கட்டி விட வேண்டுமா? அல்லது, நான் இனி என்னுடைய ஆயிசுகால பரியந்தம் உனக்கு அடிமையென்று முறி எழுதிக்கொடுக்கட்டுமா? என்ன வேண்டும் ஒரே வார்த்தையில் சொல்; உடனே தருகிறேன்” என்றார். அதைக் கேட்ட இளநங்கை வியப் புற்று நடுநடுங்கி அஞ்சியவளாகக் காணப்பட்டு, அடேயப்பா அவ்வளவு அமிதமான ஆசைகளை நான் கொள்ளக்கூடியவளல்ல. என்னுடைய யோக்கியதைக் குத் தகுந்த பதவி எனக்குக் கிடைப்பதே போதுமானது. நான் கேட்க விரும்புவது வேறொன்றும் இல்லை. இப்போது ஆரம்ப மோகத்தில் தாங்கள் என்மேல் நிரம் பவும் அபிமானம் வைப் பீர்கள். அதைப் பற்றிச் சந்தேகமில்லை. காலக்கிரமத்தில் இப்போது இருக்கும் புதுமோகம் மாறிவிடும். பிறகு தாங்கள் ஒரு சமயத்தில் என்னைப் பார்த்து, 'நீ திருடர்களை விட்டு என்னைப் பலவந்தமாகக் கொண்டு வந்த திருடியல்லவா? என்று கேட்டு என்னைத்துாற்றி இழிவாக நடத்த நேர்ந்தாலும் நேரும். ஆகையால், தாங்கள் இப்போது ஒரு காரியம் செய்ய வேண்டும். நான் தங்களைப் பலவந்தமாகக்கொண்டு வந்ததை மனப்பூர்வமாக மன்னித்து விட்டதாகவும், இனி இந்த விஷயத்தைப்பற்றி என்னிடத்தில் பேசுகிறதாவது என்னை இழிவு படுத்துகிறதாவது இல்லையென்று பிரமாணமாகச் சொல்வதாகவும் ஒரு