பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 119 அவர்களைப் பலவகையில் சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்தன. அவ்வாறு அரைக்கால் நாழிகை நேரமாயிற்று. அந்த அறையை நோக்கிக் காலடி ஓசையும், வெளிச்சமும் வருவதாகப் புலப்பட்டது. அடுத்த நிமிஷத்தில் கையில் விளக்கோடு கட்டாரித்தேவன் அங்கே வந்து சேர்ந்தான். இளவரசர் அவனோடு வராமல், அவன் தனிமையில் வந்ததும், போனவன் அதிகநேரம் தாமதியாமல் உடனே திரும்பி வந்ததும், பெருத்த வியப்பையும், திகிலையும், சஞ்சலத்தையும் ஜெமீந்தார் முதலிய மூவரது மனத்திலும் உண்டாக்கின. அவன் இளவரசரை ஒருக்கால் கொன்றிருப்பானோ, அல்லது எங்கேயாகிலும் சிறைப்படுத்தி இருப்பானோ என்ற பலவகையான எண்ணங்கள் அவர்களது மனதில் தோன்றின. இளவரசரது கதியே அப்படியிருந்தால், தங்கள் மூவரையும் அவர்கள் எப்பாடு படுத்தமாட்டார்களென்ற பெருத்த கிலியும் நடுக்கமும் உண்டாயின. அப்படியிருந்தாலும், மருங்காபுரி ஜெமீந்தார் சிறிது துணிவடைந்தவராய்க கட்டாரித்தேவனை நோக்கி, "ஏனப்பா! இளவரசரை எங்கே காணோம்? அவர் திரும்பி வருவாரா மாட்டாரா? அவர் இந்தத் தேசத்து மகாராஜனுடைய புத்திரர் என்று நினைவிருக்கட்டும்' என்று நயமாகக் கூறினார். அதைக் கேட்ட கட்டாரித்தேவன் ஏளனமாக நகைத்துப் புரளியாகப் பேசத் தொடங்கி, "அவர் மகாராஜாவுடைய மகனாயிருந்தால் எங்களுக்கென்ன? பிச்சைக்காரனுடைய மகனாயிருந்தால் என்ன? எங்களுக்கு எல்லோரும் சமமான மனிதர்கள்தான். உங்களுடைய நியாயம் பெரிய மனிதருக்கொன்று; ஏழைகளுக்கொன்று; எங்களுடையது அப்படியல்ல. யாராக இருந்தாலும் நாங்கள் எங்களுடைய நியாயத்தை நிறைவேற்றியே தீருவோம். யோக்கியர் களாக இருப்பவர்கள் எவரிடத்திலும் நடுநிலைமை தவறாமலே தான் இருப்பார்களென்பது உமக்குத்