பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பூர்ணசந்திரோதயம்-1 தெரியாதா? இளவரசருக்கு ஏதாவது துன்பம் சம்பவித்து விட்டதோ என்று நீர் கொஞ்சமும் அஞ்சத் தேவையில்லை. அவர் லொகுலான ஓர் இடத்தில் சந்தோஷமாக இருக்கிறார். அவரைப்பற்றி உங்களுக்குக் கவலையே வேண்டாம் : என்று துடுக்காகப் பேசினான். அதைக்கேட்ட ஜெமீந்தார், "அப்படியானால் அவர் திரும்பி வர இன்னும் எவ்வளவு நேரம் பிடிக்கும்?” எனறார். கட்டாரித்தேவன், தயவுசெய்து உம்முடைய கடிகாரத்தை எடுத்துப் பார்த்து இப்போது மணி என்னவென்பதைச் சொல்லும். அதற்குமேல் மற்ற சங்கதியைத் தெரிவிக்கிறேன்" என்று கூறினான். உடனே ஜெமீந்தார்.தமது சட்டைப்பையிலிருந்த வைரங்கள் பதிக்கப்பட்டதும், சுமார் இரண்டாயிரம் ரூபாய் பெறத்தக்கது மான தமது தங்கக் கடிகாரத்தை வெளியில் எடுத்துப் பார்த்து, “மூன்றுமணிக்குப் பத்து நிமிஷம் இருக்கிறது' என்றார். அந்த வார்த்தையைக் கேட்ட கட்டாரித்தேவன், 'நீர் சொல்வது சரியல்ல. உமக்குத் துக்கக்கண். அதிலும் இருள். ஆகையால், முள்கள் உமக்குச் சரியாகத் தெரியவில்லை. அதை இப்படிக்கொடும்; நான் லாந்தரின் கிட்ட வைத்துப் பார்க்கிறேன்” என்று நிதானமாகக் கூறினான். அதைக்கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் தமது கடிகாரத்தைத் தங்கச் சங்கிலியோடு எடுத்து அவனிடத்தில் கொடுக்க, அவன் அதை வாங்கி வைத்துக்கொண்டு விளக்கண்டையில் பிடித்துப் பார்த்து, "ஆகா! கடிகாரம் நிரம்பவும் சொகுஸாக இருக்கிறது! இதை நீர் எத்தனை ரூபாய்க்கு வாங்கினர்?" என்றான். ஜெமீந்தார், 'நான் இரண்டாயிரத்துக்கு வாங்கினேன்" எனறாா. உடனே கட்டாரித்தேவன், "சரி; இருக்கும் இருக்கும். உருப்படி நிரம்பவும் உயர்வானதாகத்தான் இருக்கிறது. இது