பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 121 போகட்டும்; இன்னமும் உம்மிடத்திலிருக்கும் மோதிரங்கள், பணம் முதலிய எல்லாச் சாமான்களையும் எடுத்து இப்படிக் கொடும். அவைகளையெல்லாம் தூக்கிச் சுமக்கும் படியான கஷ்டத்தை உமக்கேன் வைக்க வேண்டும் ' என்று மிகவும் நிதாதனமாகவும் அழுத்தமாகவும் கூறினான். அந்த வார்த்தையைக் கேட்ட ஜெமீந்தார் மட்டுக்கடங்கா வியப்பும் திகைப்பும் திகிலும் கொண்டவராய் அவனை நோக்கி, "என்ன இது? உங்களைப் பற்றி நான் மிகவும் மதிப்பாக அல்லவா நினைத் திருந்தேன்! கட்ைசியில் நீங்கள் கொள்ளைக்காரர்கள்தானா?” என்று கூறினார். கட்டாரித்தேவன், 'அப்படியானால் எங்களை வேறு யாரென்று தான் எண்ணினிர்?' என்றான். மருங்காபுரி ஜெமீந்தார்: நீங்கள் இன்னாரென்பது தான் தெரியாமலிருந்தது. ராஜபாட்டையில் நீங்கள் எங்களிடத்தில் இருந்த பொருள்களைக் கொள்ளையடிக்காததிலிருந்து நீங்கள் கொள்ளைக் காரர்களல்ல என்றும், வேறே ஏதோ கருத்தோடு எங்களைக் கொண்டு வருகிறீர்கள் என்றும் நினைத்தோம். கட்டாரி:- நீர் சொல்வது உண்மையான சங்கதிதான். இந்தக் காலத்தில் ஒரே வியாபாரம் செய்தால் கட்டிவருகிறதில்லை யல்லவா. அதனால் நாங்கள் பலவகையான வியாபாரம் செய்து வருகிறோம். எங்கே? எடும் எடும்; நேரமாகிறது; கை விரல்களிலுள்ள வைர மோதிரங்களை யெல்லாம் கழற்றி இப்படிக் கொடும். அவைகள் எவ்வளவு விலை பெறுமென்று மதிப்புப் போட வேண்டும். அதோடு சட்டைப் பையிலுள்ள பணப்பையையும் வெளியில் எடும். எங்களுடைய யோக்கியதையைப் பற்றி நீர் வேறுவிதமாக நினைத்தால், அதற்கு நாங்கள் உத்தரவாதியல்ல. வீணாக வார்த்தைகளை வளர்ப்பதில் பயனில்லை. எடும்' என்று.அதட்டிக் கூறினான். அதைக்கேட்ட அந்த ஜெமீந்தார் தமது பணப்பையை யும் கையிலிருந்த மோதிரங்களையும் உடனே எடுத்து