பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பூர்ணசந்திரோதயம்-1 அலட்சியமாக அவனிடத்தில் கொடுத்துவிட்டார். அவருக்கு அபாரமான செல்வமிருந்ததாகையால், அந்த நகைகளும், பணமும் போனது அவருக்கு அவ்வளவாக விசனம் உண்டாக்க வில்லை. தவிர, அவர் அந்த முரட்டு மனிதர்களுடைய வசத்தில் நன்றாக அகப்பட்டுக்கொண்டிருந்தமையால், அவ்வாறு கொடுக்கர்மல் இருக்க அவர் விரும்பினாலும், அது சாத்தியப்பட்டிருக்காது. அவரை அந்த முரடர்கள் நையப் புடைத்து அந்தப் பொருள்களைப் பலவந்தமாகப் பிடுங்கிக்கொண்டிருப்பார்கள். ஆகவே அவர் மரியாதையாக அவைகளை எடுத்துக் கொடுத்துவிட்டார். உடனே கட்டாரித்தேவன் மோதிரங்களைப் பத்திரப்படுத்திக் கொண்டு பணப்பையைக் கவிழ்த்து எண்ணிப் பார்த்துவிட்டு அவரைநோக்கி, “சே! இவ்வளவுதானா! நீர் கோடீசுவரர்; ஜெமீந்தார்; உம்முடைய பணப்பையில் நூற்றைம்பது ரூபாய்தானே இருக்கிறது.சே எனக்கே வெட்கமாக இருக்கிறது. ஒரு கோடீசுவரரிடத்தில் கொள்ளையடித்து நூற்றைம்பது ரூபாய் தான் கொண்டு வந்தாயா என்று என்னுடைய பெண்டாட்டி முகத்தில் இடிப்பாளே; உம்மிலும் தாழ்ந்த ஏழைகள் எல்லாம் எவ்வளவோ அதிமான பணத்தை வைத்துக்கொண்டு வந்து என்னிடத்தில் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன பெரிய மனிதரையா நீர்? அது போகட்டும். இன்னொரு பையில் தினசரி டைரிப் புஸ்தகம் வைத்திருக்கிறீரே; அதை இப்படிக் கொடும். அதற்குள் ஏதாகிலும் இருக்கும்' என்று மிகவும் நிதானமாகவும், தனக்கு நியாயமாகச் சேரவேண்டிய கடனைக் கேட்பவன் போல அதிகாரமாகவும் பேசினான். உடனே ஜெமீந்தார்.தமது சட்டைப்பையிலிருந்த தினசரி டைரியை எடுத்து அவனிடத்தில் கொடுத்தவராய், "இந்தப் . புஸ்தகத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இரண்டு இருக்கின்றன. அந்த நோட்டுகளை நீ சந்தோஷமாக