பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 125 வைத்து என்னிடத்தில் கொடும். அந்த முத்திரைகள் கெடாமல் அப்படியே புஸ்தகத்தைக் கொண்டுவந்து நாளைய தினம் உம்மிடத்தில் சேர்க்கிறோம். ஜெமீந்தார்:- நான்தான் எல்லா மோதிரங்களையும் உன்னி டத்தில் கொடுத்துவிட்டேனே. என்னிடத்தில் முத்திரை மோதிரம் ஏது? கட்டாரி:-நீர் சொல்வது நிஜந்தான். உம்முடைய பெயரின் முதலெழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கும் மோதிரத்தை இப்போது நான் உம்மிடத்தில் கொடுத்துவிடுகிறேன். முத்திரை போட்டுவிட்டு அந்த மோதிரத்தை நீரேவைத்துக்கொண்டிரும். நாளைக்குப் புஸ்தகத்தை வாங்கிப்பார்த்து முத்திரைகள் சரியாக இருந்தால் பணத்தையும் இந்த மோதிரத்தையும் கொடும் எனறான. ஜெமீந்தார்: சரியான ஏற்பாடு. அப்படியே செய்வோம்என்று கூறிய வண்ணம் டைரிப் புஸ்தகத்தை வாங்கி உறைக்குள் போட்டு அரக்கு முத் திரை வைத்து அதை அவனிடத்தில் கொடுத்து விட்டு மோதிரத்தைத் தமது கையில் அணிந்து கொண்டவராய் கட்டாரியை நோக்கி, 'இதெல்லாம் சரிதான். இந்தப் புஸ்தகம் எப்போது யார் மூலமாக என்னிடத்தில் வருகிறது? நான் எப்படி அந்தத் தொகையைக் கொடுத்தனுப்புகிறது?" என்றார். அதைக்கேட்ட கட்டாரித்தேவன், 'நீர் ஒரு காரியம் செய்யும்; வருகிற புதன்கிழமை தினம் முழுதும் நீர்வெளியில் போகாமல் உம்முடைய மாளிகையிலேயே இரும். இரண்டாயிரம் ரூபாயை உம்முடைய கை வசத்தில் தயாராக வைத்துக்கொண்டிரும். மற்ற விஷயங்களையெல்லாம் எனக்குவிட்டுவிடும். நான் பக்குவமாக முடித்துவிடுகிறேன்' என்றான். அதைக் கேட்ட ஜெமீந்தார் சிறிது தயங்கியபின், அந்த ஏற்பாட்டிற்குத் தாம் இணங்குவதாகச் சொல்லி ஒப்புக் கொண்டார். உடனே கட்டாரித்தேவன் அவரை அவ்வளவோடு