பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பூர்ணசந்திரோதயம்-1 விட்டுவிட்டு, "சரி, நேரமாகிறது; நான் போய் மகாராஜாவை அழைத்துக்கொண்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு லாந்தரை கையிலெடுத்துக்கொண்டு திரைக்கு அப்பாலிருந்த படிகளின் வழியாக மேன்மாடத்திற்குச் சென்றான். வண்டிக் காரனையும் வேலைக்காரனையும் கொள்ளையடிப்பது தனது கண்ணியத்திற்குக் குறைவென்று நினைத்த கட்டாரித்தேவன் அவர்களை எவ்விதத்திலும் வருத்தாமல் சும்மாவிட்டு விட்டு அப் பால் சென்றான். தாங்கள் தப் பினதைப் பற்றி அந்த ஆட்கள் இருவரும் மிகுந்த சந்தோஷமடைந்தவராய் உட்கார்ந்து கொண்டிருந்தனர். லாந்தரும் கையுமாக மேலே ஏறிச்சென்ற கட்டாரித்தேவன் உச்சியை அடைந்து கதவை மெதுவாகச் சிறிதளவு திறந்து பார்க்க, உட்புறத்தில் இளவரசர் மாத்திரம் காணப்பட்டார். அவர் கட்டில்கள், பீரோக்கள் முதலிய சாமான்களின் அப்பால் போய் எதையோ தேடிப் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக்கண்ட கட்டாரித்தேவன் புரளியாகப் புன்னகை செய்தவனாய், மகாராஜா அவ்வளவு ஆவலாக எதைத் தேடுகிறார்?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவன் வந்ததைக் கண்டு திடுக்கிட்டு இளவரசர் திரும்பினார். அவரது முகம் மிகுந்ததுயரத்தையும் ஏமாற்றத்தையும் குழப்பத் தையும் காட்டியது. அப்போது தாம் கண்ட காட்சி கனவோ நினைவோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. இரண்டொரு நிமிஷ நேரம் இளவரசர் அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்க, அதற்குள் அவருக்கு அருகில் போய் நின்ற கட்டாரித்தேவன், 'ஏன் மகாராஜா போகலாமல்லவா? ஏதாகிலும் சாமானை எங்கேயாவது வைத்து விட்டீர்களா? என்ன தேடுகிறீர்கள்?" என்று குறும்பாக மொழிந்தான். அவனது வார்த்தை தீயின் மேல் நெய்யைச் சொரிவது போல அவரது மனதைத் தகித்தது. அவர் சிறிதுநேரம் தயங்கி, 'ஆ டேய் ஆளே! நீ எனக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எவ்வளவோ பாடுபட்டு என்னை இங்கே கொண்டு வந்து இந்தப் பார்சீ ஜாதிப்