பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 127 பெண்ணினிடத்தில் சேர்த்துவிட்டாய். அவளும் நானும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். நீங்கள் என்னை இப்படி பலவந்தமாகக் கொண்டுவந்ததை மன்னிப்பதாக ஒரு காகிதத்தில் எழுதி என்னுடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டு, அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வருவதாகப் போனாள். அவள் திரும்பி வருவாள் வருவாள் என்று அதுமுதல் இதுவரையில் நான் பொறுத்திருந்தேன். அவள் வரவே இல்லை. நான் எழுந்துவந்து பார்க்கிறேன். இந்த இடத்திலிருந்து வெளியில் போகக்கூடிய வாசலாவது வேறே வழியாவது காணப்படவில்லை. அவள் எங்கே தான் போனாள் என்பது தெரியவில்லையே கண்கட்டு வித்தையில் மறைவது போல மாயமாக மறைந்து போயிருக்கிறாளே! அவள் எங்கே போனாள் என்பது உனக்குத் தெரியுமா? திடீரென்று ஏதாகிலும் தேகபாதை ஏற்பட்டதனால், அவள் ஒருவேளை அப்பால் போயிருப்பாளா? அப்படிப் போவதற்கு வழியே இல்லையே! ஒரு கால் இந்த பீரோக்களில் எதிலாகிலும் நுழைந்துகொண்டு உட்புறத்தில் பூட்டிக் கொண்டிருப்பாளா? இவ்வளவு பிரயாசைப்பட்டு என்னை இங்கே கொணர்ந்து இவ்வளவுதூரம் பேசிவிட்டு பீரோவுக்குள் போய் ஒளியக் காரணமில்லையே! இந்த அற்புதத்தை என்னவென்று சொல்லுகிறது! ஒருவேளை எனக்குத் தெரியாமல் இங்கே சுவரில் மறைவான வழி ஏதாகிலும் இருக்கிறதா? உனக்குத் தெரிந்திருந்தால், சொல்' என்று மிகவும் நயமாகவும், இளக்கமாகவும் பேசினார். அதைக் கேட்ட கட்டாரித்தேவன் ஏளனமாகப் புன்னகை செய்த முகத்தோடு அவரை நோக்கி, 'என்ன ஆச்சரியம்! இங்கே ஒரு பெண்ணா இருந்தாள் அது எனக்குத் தெரியாதே! மகாராஜா வுடைய சாமர்த்தியம் இவ்வளவுதானா? உங்களுடைய கண்ணுக்கு எதிரிலே இருந்த பெண் எங்கே போனாள் என்று என்னைக் கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லுகிறது? சரி; மகாராஜாவுக்கு அவ்வளவுதான்