பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 131. உட்கார வைத்து கதவுகளையும், பக்கப்பலகைகளையும் மூடி இருளுண்டாக்கினர். உடனே வண்டி புறப்பட்டுப் போகத் தொடங்கியது. அந்த முரட்டு மனிதர்களுள் சிலர் வண்டிக்கூண்டின் மேலும் முன்புறத்திலும் உட்கார்ந்தி ருப்பதாகத் தெரிந்தது. அந்த வண்டி வந்த வழியாகவே திரும்பி விரைவாய்ப் போகத் தொடங்கியது. அவ்வாறு அது இரண்டொரு மைல் தூரம் போவதற்குள் வண்டியின் மேலிருந்த முரட்டு மனிதர்களின் தொகை குறைவாகத் தோன்றியது. கடைசியாக வண்டி நெடுந்துரம் போய் நின்றுவிட்டது. வண்டிக்குள்ளிருந்த இளவரசரும் ஜெமீந்தாரும் மற்ற இருவரும் வாய் திறந்து பேசவும் அஞ்சியவர்களாய், அந்த முரட்டு மனிதர்கள் தங்களை எவ்விடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் களோ என்ற ஐயமும் அச்சமும் கொண்டு தவித்திருந்ததன்றி. அவர்களது தலைவன் வந்து கதவைத் திறப்பான் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். அவ்வாறு கால் நாழிகை நேரமும் சென்றது. எவனும் வந்து கதவைத் திறக்கவுமில்லை. அந்த வண்டியின்மீது மனிதர் இருந்த ஒசையாவது, கிசுகிசுவென்று பேசிக் கொண்டதால் அதற்குமுன் உண்டான ஒசையாவது புலப்படவில்லை. இளவரசர் மிகுந்த வியப்படைந்து மெதுவாகத் திரைகளை விலக்கிவிட்டு ஒரு பக்கத்துக் கதவைத் திறந்து தலையை வெளியில் நீட்டிப் பார்த்தார். வண்டி ராஜபாட்டையின்மேல் தனியாக நின்று கொண்டிருந்ததேயன்றி, மனிதர் அவரது திருஷ்டியில் படவில்லை. உடனே இளவரசர் எழுந்து வண்டியை விட்டுக் கீழே இறங்கி நாற்புறங்களிலும் திரும்பிப் பார்க்க, அந்த முரட்டு மனிதர்களுள் ஒருவனாகிலும் அங்கே காணப்பட வில்லை. வண்டியை ஒட்டும் சாரதி உட்காரும் இடமும் காலியாக இருந்தது. அவர் உடனே அந்த ராஜபாட்டையின் இருபுறங்களையும் உற்றுநோக்கி, அதே இடத்தில் அதற்குமுன் அந்த முரட்டாள்கள் தங்களைப் பிடித்து பலவந்தமாக அழைத்துக் கொண்டு போனார்கள் என்பதை உணர்ந்து