பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பூர்ணசந்திரோதயம்-1 கொண்டார். ஆகவே, அந்த முரட்டு மனிதர்கள் தங்களைத் தங்களுடைய பாட்டையில் கொணர்ந்து சேர்த்து விட்டு, ஒடிப்போய்விட்டார்களென்பதை இளவரசர் யூகித்துக் கொண்டவராய், தமது ஆட்கள் இருவரையும் வெளியில் அழைத்து வண்டியை மறுபடியும் தஞ்சைக்கு ஒட்டும்படி உத்தரவு செய்துவிட்டு, வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். உடனே வண்டி தஞ்சையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த வண்டிச் சுவடு போன வழியாகவே சென்று அவர்கள் தங்களைக் கொண்டு போன மாளிகையின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாமென்ற நினைவு அவரது மனதில் உண்டான தானாலும் அந்தப் பாதை கப்பிக் கல்லினாலான இறுகிய கட்டாந்தரைப் பாதையாகையால், அதன்மேல் வண்டிச்சுவடே காணப்படாமல் இருந்ததனால் அவர் அந்த எண்ணத்தின்படி நடக்கமுடியாமல் போனது. ஆகவே, பொழுது விடிவதற்குள் தாம் தமது அரண்மனைக்குப் போய் விட வேண்டுமென்ற அவாவைக் கொண்டவராய், இளவரசர் வண்டியை விசையாக ஒட்டும்படி சாரதிக்கு உத்தரவு பிறப்பித்தார். அவ்வாறே அவன் குதிரைகளை முடுக்கி நாற்கால் பாய்ச்சலில் ஒட்டிக்கொண்டி ருந்தான். அப்போதே இளவரசரும் ஜெமீந்தாரும் வாய்திறந்து ஒருவரோடொருவர் பேசத்தொடங்கி, தத்தமக்கு நேர்ந்த விஷயத்தை வெளியிடத் தொடங்கினர். நெடுநேரமாக அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பேசி, விவரங்களை அறிந்துகொள்ள ஆவலுற்றிருந்தனர். ஆனாலும், தங்களது வண்டிக்காரன், காசாரி ஆகிய இருவரும் உள்ளே இருப்பதையும் முரட்டுமனிதர்கள் வெளியிலே இருப்பதை யும் கருதி, அவர்கள் தங்களது அவாவை அடக்கிக் கொண்டிருந்து தனியாக இருக்க நேர்ந்தவுடனே சம்பாஷிக்க லாயினர். ஜெமீந்தார் சொன்னது மிகவும் சுருக்கமானதாக இருந்தது. ஆானாலும், அது இளவரசரது மனத்தில் அளவிறந்த வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கி அவர் அந்தப் பார்சீ ஜாதிப் பெண்ணைப் பற்றி மதிப்பாகவும் இன்பகரமாகவும்