பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 133 எண்ணியிருந்த எண்ணத்தையெல்லாம் மண்ணாகச் செய்தது. அதுவரையில் இளவரசர் அந்த முரட்டாள்கள் கொள்ளைக்காரர் களல்லரென்றும், அந்த மடந்தையின் பொருட்டுத் தங்களைப் பலவந்தமாகக் கொண்டு போவதைத் தவிர வேறு எவ்வித நோக்கமும் இல்லாதவர்கள் என்றும் எண்ணியிருந்தார். அவர்கள் வழிப்பறி செய்யும் கள்வரென்பதை உணரவே அந்தப் பெண்ணும் அவர்களைச் சேர்ந்தவள் என்பதும், அவள் தம்மிடத்தில் அந்தரங்கமான காதல் கொண்டிருப்பதாகவும் வேறு பலவாறாகவும் அவள் தெரிவித்த சங்கதியெல்லாம் கட்டுக்கதையென்பதும் இளவரசருக்குத் தெளிவுபட்டன. ஆகையால், அவள் தம்மை ஏமாற்றிவிட்டுத் திடீரென்று மாயமாக மறைந்துபோனபிறகும் அவரது மனத்தில் தணியாமல் கொந்தளித் தெழுந்துகொண்டிருந்த மோகவெறி, இந்தப் புதிய செய்தியைக்கேட்க, சடக்கென்று தணிவடைந்தது. இருந்தாலும் அவளது ஜாஜ்வல்லியமான அழகும், வசீகரத் தோற்றமும், புத்தி நுட்பமும், வாக்குநயமும், இன்பமயமான வடிவமும் அவரது உணர்வைவிட்டு விலகாமல் உறுதியாகப் பதிந்து அப்போதும் அவரது அறிவையும் பஞ்சேந்திரியங்களையும் மயக்கி உருக்கி ஆனந்தவெறியில் ஆழ்த்திக்கொண்டி ருந்தமையால், இளவரசர் தாம் அந்த முரட்டுமனிதனோடு தனியாகப் பிரிந்துபோய் மேன்மாடத்தை அடைந்ததுமுதல், மறுபடியும் திரும்பி வந்தவரையில் நிகழ்ந்த வரலாறு முழுதையும் அப்படியே எடுத்துக்கூற மருங்காபுரி ஜெமீந்தார் மிகுந்த் வியப்பும், திகைப்பும், ஆனந்தமும் கொண்டவராய் நிரம் பவும் சிரத்தையாக அதைக் கேட்டு வந்தார். அந்த மின்னாளின் தேஜோமயமான கட்டழகையும், காந்தியையும், அலங்காரச் சிறப்பையும், குணாதிசயங்களையும் இளவரசர் எடுத்துச் சொன்னபோது அந்த ஜெமீந்தாரது மனதும் தேகமும் ஆனந்த சாகரத்தில் மூழ்கியதன்றி அவரது நாக்கிலும் அமிர்தரசம் அப்போதும் ஊறிப் பெருக்கெடுத்தது. ஆனால், அவள் முடிவில் மாயமாக மறைந்துபோனாளென்ற