பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பூர்ணசந்திரோதயம்-1 சொல்வதை எல்லாம் அவள் செய்வாள். அவள் என்மேல் உண்மையான காதல் கொண்டு தானாகக் கனிந்து வருவாளானால், அவளிடத்தில் நான் இப்படிப்பட்ட செய்தியைச் சொல்வது ஆண்மையல்ல. அவளும் என் சொற் படி நடக்கமாட்டாள். அந்த ஒரு விஷயம்தான் பெருத்த இடையூறாக விருக்கிறது" என்றார். அதைக்கேட்ட ஜெமீந்தார்,'வாஸ்தவந்தான். இருந்தாலும், இந்த விஷயங்களில் தங்களுக்குத் தெரியாத யோசனையை நானாசொல்லிக்கொடுக்கப் போகிறேன். தாங்கள் பார்த்து மனசு வைத்தால், எப்படியாவது சமயோசிதமாக நடந்து தந்திரம் செய்துவிட முடியும். அவ்வளவு அபாரமான சாமர்த்தியம் தங்களிடத்தில் இருக்கிறது. அந்தப் பூர்ணசந்திரோதயத்தை கலியாணபுரம் மிட்டாதார் முதலிய எவரும் அடையாமல் நாம் செய்துவிட வேண்டியது முதல் காரியம். அதுவே ஒர் ஆனந்தம். வெளிப்பார்வைக்குத் தாங்களே ஜெயித்ததாக இருக்கட்டும். பந்தயப் பணமாகிய முப்பதினாயிரம் ரூபாயை நான் தங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். உள்வயணமாகத் தாங்கள் அவளை மாத்திரம் எனக்குக் கொடுத்துவிடுங்கள். இப்படிச் செய்வது தங்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்களுக்கு மற்றவர்களுடைய சிநேகத்தைவிட என்னுடைய பழைமை யான சிநேகிதம். நாமிருவரும் இதைவிட அதிசயமான எத்தனையோ காரியங்களை இதுவரையில் செய்திருக்கிறோம். ஆகையால், தங்களுடைய கண்ணியத்துக்கும் ஆண்மைத்தனத் துக்கும் பழுதுவராமல் தாங்கள் இந்தக் காரியத்தை முடித்து வைப்பீர்களென்ற ஒரு நம்பிக்கை எனக்கு உண்டு' என்றார். அதைக்கேட்ட இளவரசர் சிறிது நேரம் யோசனை செய்தபின் ஜெமீந்தாரைப் பார்த்து, "சரி, அந்த விஷயத்தில் நான் என்னுடைய ஜெயத்தை உமக்கு மாற்றி வைத்து விடுவதாக வைத்துக்கொள்வோம். இந்தப் பார்சீ ஜாதிப்பெண் எங்கே இருக்கிறாள் என்பதை நீர் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறீர்?