பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 - பூர்ணசந்திரோதயம்-1 பூர்ணசந்திரோதயம் முன்போலவே நிதானமாகவும் அமர்த்தலாகவும் பேசத் தொடங்கி, 'அப்படியானால் கொஞ்ச நேரத்துக்கு முன் நீர் என்னுடைய பஞ்சவர்ணக் கிளியைப் பிடித்து வாசலிலுள்ள வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பாமல் நீரே நேரில் உள்ளே வந்தது, என்னைக் கலியாணம் செய்துகொள்ள விரும்புவதாக என்னிடம் வெளியிட்டு, என்னை கெளரவிக்கும் எண்ணத் தோடு தானோ? என்று வினவினாள். அவளது வார்த்தையைக் கேட்ட மிட்டாதார் வியப்பும் திகைப்பும் அடைந்து தமது கருத்தை அவள் தப்பாக உணர்ந்து கொண்டாளென்பது தோன்றவும் தமது அந்தரங்கமான எண்ணம் இன்னதுதான் என்பதை தாம் எப்படி வெளியிடுவது என்ற கவலை கொண்டவர் போலவும் அவளைப் பார்த்து, 'என்ன என்ன கலியானமா? என்று ஆச்சரியமாக வினவினார். பூர்ணசந்திரோதயம் மிகுந்த வியப்பும் திகைப்பும் அடைந்தவளாகக் காணப்பட்டு, “நீர் இப்போது அதைப்பற்றித் தானே பேசினiர். என்மேல் பிரமாதமான காதல் கொண்டிருப்பதாகவும், என் பொருட்டு உயிரைக் கூடக் கொடுத்துவிடத்தயாராக இருப்பதாகவும் நீர் சொன்னிரே; அதன் கருத்தென்ன? பெரிய அந்தஸ்திலுள்ள உம்மைப் போன்ற ஒரு மனிதர், மகா பரிசுத்தமான நடத்தையுள்ளவளும், ஒரு மகாராஜாவின் புத்திரியுமான என்னிடத்தில் வந்து காதல் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால் அதன் கருத்து நீர் என்னை கிரமப்படி கலியாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறீர் என்று தான் ஆகும். இதே வார்த்தைகளை நீர் ஒரு தாசியினிடத்தில் சொல்லியிருந்தால், அப்போது கலியாணம் என்ற அர்த்தம் தொனிக்காது; ஆகையால், நீர் என்னை குலஸ் திரீ என்று மதித் தீரா? அல்லது தாசியென்று மதித்தீரா?' என்றாள்.