பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 147 அதைக் கேட்டவுடனே கலியாணபுரம் மிட்டாதார் திருட்டு விழி விழித்து, அசட்டு நகை நகைத்து, இன்ன மறுமொழி சொல்வதென்பதை உணராமல் பல்லைப் பல்லைக்காட்டி ஏதோ வார்த்தைகளைச்சொல்லியும் சொல்லாமல் அடக்கியும் தவித்து அவளை நோக்கி, நீ மகா சூட்சும புத்தியுடையவளாக இருக்கிறாய்; அப்படியிருந்தும், என்னுடைய சொல்லின் உட்கருத்தை அறிந்து கொள்ளாதவள்போல நடிக்கிறாயே! ஒர் ஆணும் பெண்ணும் ஒருவர் மேலொருவர் கடுங்காதல் கொண்டுவிட்டால், அவர்கள் கலியாணம் செய்து கொண்டால் தான் அந்தக் காதல் பலிதமாகுமென்று சொல்லலாமா? உண்மைக் காதலைத் தடுக்க எவரால் ஆகும்? ஒரு ஸ்திரீயினால் காதலிக்கப்பட்ட மனிதன் அவளைக் கிரமமாகக் கலியாணம் செய்து கொள்ளக்கூடாத நிலைமையில் இருக்கலாம். இப்போது எனக்கு வேறே ஒரு சம்சாரம் இருக்கிறாள்; அவளிடத்தில் எனக்கு உண்மையான காதலே கிடையாது. அது என்னுடைய தாய் தகப்பனாரால் ஏற்படுத்தப்பட்ட கால் கட்டு; இப்போது எனக்கு உன்னிடத்தில் ஏற்பட்டுள்ளதே உண்மையான காதல். ஏற்கெனவே ஒரு பெண்ஜாதி இருக்கிறாளே யென்று என் மனதில் இயற்கையாக பொங்கிப் பெருகும் வேட்கையை அடக்குவது சாத்தியமாகுமா? அப்படி நான் இந்தக் காதலை அடக்குவதாகவே வைத்துக்கொண்டாலும் இந்தக் காதல் முழுதும் இப்படியே என்னுடைய சம்சாரத்தின்மேல் திரும்பிவிடப் போகிறதா? என்னுடைய உண்மைக் காதலை நிறைவேற்றிக் கொள்ளும் விஷயத்தில் அவள் ஒரு பெருத்த இடையூறாக இருக்கிறாளே என்ற எண்ணத்தினால் அவளிடத்தில் வெறுப்பும் பகைமையும் தான் உண்டாகும்; என் மனசில் வேறே மனிதரிடத்தில் உண்டாகும் உண்மையான காதலை நான்சுயேச்சையாக நிறைவேற்றிக் கொள்வேனானால், தாலிகட்டின சம்சாரமாயிற்றே என்ற மதிப்பும் ஏற்கெனவே உள்ள பிரியமும் குறையாமல் இருக்கும். ஆகையால், மனிதன் ஒரே பெண் ஜாதியைத் தவிர வேரு ஒருத்தியை அடையக்