பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 சொல்லுகிறீர்? ஒரே வார்த்தை. மறுவார்த்தை இல்லை' என்று மகா கண்டிப்பாகவும் கடுரமாகவும் பேசிக்கொண்டு யாரையோ கூப்பிட எண்ணுகிறவள்போல வாசலின் பக்கம் திரும்பினாள். அவள் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு மிகுந்த வெட்கமும், துக்கமும், கோபமும், பதைபதைப்பும் கொண்டவராகத் தோன்றிய கலியாணபுரம் மிட்டாதார் கதிகலங்கிப்போப் அவளை நோக்கி, 'என்ன பூர்ணசந்தி ரோதயம்! நீ உண்மையாகத் தான் இப்படிப் பேசுகிறாயா? அல்லது, இன்னமும் என்னைச் சோதிக்கிறாயா? நீ என்னை எவ்வளவுதான் வெறுத்தாலும் அலட்சியமாய்ப் பேசினாலும் நான் உன்னிடத்தில் வைத்துள்ள பிரேமை மாத்திரம் ஒருநாளும் குறையாது. உன்னுடைய உயிருள்ளவரையில், என்னுடைய உயிருள்ளவரையில் நான் உன்னை விடப்போகிறவனல்ல. எப்படியும் நான் உன்னை அடைந்தே தீரவேண்டுமென்று சங்கற்பம் செய்து கொண்டிருக்கிறேன். கிழக்கு மேற்காகப் போகும் சூரியன் தெற்கு வடக்காகப் போனால்கூட என்னுடைய உறுதி மாத்திரம் மாறாது. விண்ணுலகத்திலுள்ள சகலமான தேவதைகளின் பக்கபலமும் உனக்கிருந்து அவைகள் உன்னைக் காத்துக் கொண்டிருந்தாலும், என்னுடைய துஷ்டகனங்களின் உதவியைக் கொண்டு நான் என்னுடைய மனோரதத்தை நிறைவேற்றியே தீருவேன் என்பதை நீ திண்ணமாக எண்ணலாம். இப்போது என்னை நீ மிகவும் கேவலமாகவும் இளக்காரமாகவும் மதித்துப் பேசுவதைப் பற்றிப் பின்னால் நீயே விசனப்பட நேரிடும்; ஆகையால் எந்த விஷயத்தை யும் இரண்டாந்தரம் எண்ணிச் செய் ' என்று நயமாகவும் பயமுறுத்தலாகவும் மறுமொழி கூறினார். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் தனது முகத்தை ஒரு பக்கமாகச் சாய்த்து, கம்பீரமாகவும் அலட்சியமாகவும் அவரது பக்கம் திரும்பி அவரைக் கேவலம் ஒரு பதருக்குச்சமானமாகத்தான்மதிப்பவள் போல மிகவும் அருவருப்பாக அவரைப் பார்த்து, 'ஒ'கோ' அப்படியா பயமுறுத்துகிறீரோ இருக்கட்டும். நீர்