பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 - பூர்ணசந்திரோதயம்-1 முகத்தில் மீசையுள்ள ஆண் பிள்ளையானால் உம்முடைய கைவரிசையைக் காட்டலாம். எங்கே நீர் என்னை அடைகிறீரோ வென்பதை நான் அறிகிறேன். நீர் சுத்த விளக்கெண்ணெய் மனிதராக இருக்கிறீர்; பதினைந்து வருஷமானாலும் ஓயாமல் இப்படியே வழவழ கொழகொழவென்று.பேசிக் கொண்டே இருப்பீர்' என்று கூறிவிட்டு வாசற்படியை நோக்கி, "அடேய், யாரடா வேலைக்காரன்?' என்றாள். அவள் உள்ளொன்றும் புறமொன்றுமாகப் பேசுகிறாளோ வென்று அதுவரையில் எண்ணி மனப்பால் குடித்துக் கொண்டிருந்த கலியாணபுரம் மிட்டாதார், அவள் உண்மையாகவே தன்னை வெறுத்து இளக்காரம் செய்கிறாள் என்பதை அப்போதே உணர்ந்தவராய் அதற்குமேல் தாம் அங்கே இருந்தால், தமக்கு அவமானம் நேருமென்று நினைத்து, சரி; நீ ஏராளமான வேலைக்காரர்களை வைத்திருக்கிறவள் என்பது எனக்குத் தெரியும். உன்னுடைய பெருமையை நீ வெளிப்படுத்திக்கொண்டது இவ்வளவோடு நிற் கட்டும். இன்னாரிடத்தில் வாலை ஆட்டுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் நீ பேசுகிறாய்; இருக்கட்டும். அதிசீக்கிரத்தில் நான் உனக்கு நல்ல அறிவு பிறக்கும் படி செய்கிறேன்' என்று கூறியவண்ணம் நாற்காலியை விட்டெழுந்து வாசற் படியை நோக்கி நடந்து அப்பால் சென்று கீழே இறங்கிப்போய்விட்டார். அவரும் பூர்ணசந்திரோதயமும் இருந்து சம்பாவித்துக் கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த ஒர் அறைக்குள் ஒளித் திருந்து அவர்களது சச்சரவு முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்த பணிப்பெண்ணான தையனாயகி என்பவள், மிட்டாதார் அந்த மாளிகையை விட்டு ராஜபாட்டைக்குப் போய்விட்டார் என்பதை உணர்ந்தவுடனே மகிழ்ச்சியும் புன்னகையும் பிரகாசித்த முகத்தோடு உள்ளேவர, அவளைக் கண்ட பூர்ணசந்திரோதயம் சந்தோஷமும் களிப்பும்