பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பூர்ணசந்திரோதயம்-1 இரண்டனா நான்கணா முதலிய அற்பத் தொகையே அவனது மனதில் திருப்தியை உண்டாக்கிவிடும். அவனது உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பதற்கு அவனுக்கு ஒரு தோழன் இருந்து வந்தான். அந்தத் தோழனுக்கு ராமன் என்று பெயர். அவனுக்குச் சுமார் இருபத்தைந்து வயதிருக்கலாம். அவன்தடித்த சரீரமுடையவன் அல்ல. ஆனாலும், அவனது தேகம் கம்பிபோல அழுத்தமும், உறுதியும், வளைந்து கொடுக்கும் தன்மையும் பொருந்தியது. ஒரு வஸ்துவும் அதன் நிழலும் எப்படி ஒன்றாகவே இருக்குமோ, அதுபோல, பஞ்சண்ணாராவ் எங்கே சென்றாலும், சிறிது தூரத்திற்கப்பால் ராமன் பூனைபோல வந்து கொண்டே இருப்பான். உயிரும் உடலும் ஒன்றை விட்டு ஒன்று எப்படிப் பிரிந்திருக்காதோ, அதுபோல அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தே காணப்பட மாட்டார்கள். ஆனால், அவர்களது நடையுடை பாவனைகளில் சில வேறுபாடுகள் காணப்பட்டன. பஞ் சண்ணாராவ் தனக்கு மிஞ்சியவன் எவனுமில்லையென்றும், தன்னைக் கண்டு எல்லோரும் அஞ்சுகிறார்கள் என்றும் நினைத்து மமதையும் இறுமாப்பும் கொண்டு எவர் வந்தாலும் இலட்சியம் செய்யாது, மதயானை போல ஆடி அசைந்து ராஜபாட்டையின் நடுவிலே நடப்பான். ராமனோபூனை, அல்லது பாம்பு முதலிய துஷ்ட ஜெந்துக்கள் பதுங்குவதுபோல, ஒதுங்கிப் பதுங்கி சுவரோரமாகவும், மரத்தில் மறைந்தும் தான் வருவது பிறருக்குத் தெரியாதபடி நடப்பான். ஆனால், வெளிப்பார்வைக்கு ராமன் அவ்வாறு மறைந்து கொள்ளும் குணமுடையவனாக இருந்தாலும், அவன் மகா கூர்மையான புத்தியும், சூட்சுமமான யூகமும், ஆழ்ந்த கபடமும் நிறைந்தவனாக இருந்ததன்றி, நான்கு பக்கங்களிலும் என்ன நடக்கிறதென்பதை அதி ஜாக்கிரதையாகக் கவனித்து எந்தச்