பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காள் 155 சமயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்குத் தகுந்தபடி எப்போதும் எச்சரிப்பாகவே இருப்பான். சமயம் வருமானால், அவன் தனது தாயின்கழுத்தைக்கூட அறுத்துவிடக் கூடியவன். சில சமயங்களில் பஞ்சண்ணாராவ், ஒரு காரியத்தைச் செய்யலாமோ செய்யலாகாதோவென அஞ்சித் தயங்குவான்; ராமனோ ஒரே நொடியில் அந்த விஷயத்தை அஞ்சாநெஞ்சத்தோடு நிறைவேற்றி வைத்துவிடுவான். ராமனோ செடி கொடிகளுக்குள் மறைந்து பதுங்கிக் கடித்து உயிர் குடிக்கும் கொம்பேறி மூக்கனென்னும் பாம்புபோல இருப்பான். பஞ்சண்ணாராவோ கொழுத்துத் திமிர்கொண்டு இறுமாப்படைந்து மதோன்மத்தமாகத் திரியும் விருஷ்பராஜன் போல, எவரையும் மதியாமல் ராஜபாட்டையாகச் செல்பவன். அன்பாக ஊட்டி வளர்க்கப்படும் நாய்க்குட்டி அதன் எஜமானனிடத்தில் எவ்வளவு அந்தரங்கமான அபிமானத் தோடும் பற்றோடும் ஒழுகுமோ அதைவிடப் பன்மடங்கு அதிக பயபக்தி விசுவாசத்தோடும் உண்மையாக வும், ராமன் பஞ்சண்ணாராவிடத்தில் நடந்து கொண்டான். இப்படிப்பட்ட குணமுடைய பஞ்சண்ணாராவ், மேலே குறிக்கப்பட்டபடி சத்திரத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு கலியாணபுரம் மிட்டாதாரைக் கண்டபோது அவனது உயிர்த் தோழனான ராமன் சத்திரத்தின் வாசற் கதவிற்கு அப்பால் மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். கலியாணபுரம் மிட்டாதார், "ஒகோ பஞ்சண்ணாராவா என்ன சமாச்சாரம்? இங்கே சத்திரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டதற்கு மறுமொழியாகப் பஞ்சண்ணாராவ் பணிவாக நின்று புன்னகை செய்து, 'நான் நேற்று காலையில் சாப்பிட்டது; வயிறு பசிக்கிறது; கஞ்சாவுக்குக்கூடக்காசு இல்லை. இந்தச்சத்திரத்தில் ஏதாவது சாப்பாடு மிச்சமிருந்தால் கேட்டுப் பார்க்கலாம் என்று உள்ளே போய் மணியக்காரரிடத்தில் கேட்டுப் பார்த்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வருகிறேன். தாங்கள்