பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பூர்ணசந்திரோதயம்-1 இங்கே யாரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் சொல்லுங்கள்; நான் செய்கிறேன்' என்றான். அதைக் கேட்ட கலியாணபுரம் மிட்டாதார், 'ஒகோ அப்படியா நேற்றுமுதல் சாப்பிடவில்லையா! அப்படியானால் நான் பணம் தருகிறேன். அதைக்கொண்டுபோய் ஆகாரம் பார்த்துக் கொள்' என்று கூறினார். உடனே பஞ்சண்ணாராவ் நன்றி விசுவாசத்தோடு அவரைக் கும் பிட்டு, 'நான் எப்போதும் எஜமானுடைய மனிதன். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் உடனே முடிக்கத் தடையில்லை. எனக்குப் பணம் அதிகமாக ஒன்றும் வேண்டியதில்லை; கஞ்சாவுக்கு நாலனா கொடுத்தால், அதுவே பரிபூரணமாகிவிடும்' என்றான். அவனது வார்த்தைகளைக் கேட்கவே, கலியாணபுரம் மிட்டாதாரது மனதில் ஒரு யோசனை தோன்றியது. அவர் இரண்டொரு நிமிஷ நேரம் ஏதோ விஷயத்தைப் பற்றி யோசனை செய்தபின், அவனை நோக்கி, "பஞ்சண்ணாராவ்! நீ நான்கு அனாவல்லவா கேட்கிறாய். நான் உனக்கு நானூறு ரூபாய் தருகிறேன். நீ எனக்கு ஒர் உபகாரம் செய்வாயா?" என்றார். அதைக் கேட்ட பஞ்சண்ணாராவ் மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் கொண்டு, அவரை நோக்கி, "நான் எப்போதும் எஜமானுடைய அடிமை. உங்களுடைய பிரியம் எப்படியோ அப்படியே நடக்கக் காத்திருக்கிறேன். காரியம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது முடிந்து போனதாகவே எண்ணிக்கொள்ளலாம்' என்றான். உடனே மிட்டாதார் தணிவான குரலில் பேசத் தொடங்கி, "சரி, அந்த விஷயத்தை நாம் இங்கே இருந்து பேசுவது சரியல்ல; மறைவுக்குப்போவோம்; வா!' என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு சத்திரத்திற்குள்ளிருந்த ஒர் அறைக்குள் போய் நின்று கொண்டு பஞ்சண்ணாராவை நோக்கி, 'நான் இப்போது