பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பூர்ணசந்திரோதயம்-1 கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். என்னுடைய உயிரே இதில் இருப்பதாக நினைத்து நான் வேலை செய்கிறேன். தாங்கள் இனிப் போகலாம். க. மிட்டாதார்:- சரி; சந்தோஷம். ஆனால், இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. நீங்கள் எனக்காக இப்படிப் பட்ட காரியம் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதே எவருக்கும் தெரியக்கூடாது. அதுவும் இன்னம் யாராவது பிரபுக்கள் வந்து இவளை அடையும் விஷயத்தில் தமக்கு உதவி செய்யும் படி உன்னிடத்தில் கேட்டுக் கொள்ளுவார்கள். அதற்கெல்லாம் நீ இணங்கவே கூடாது. எனக்கு மாத்திரமே நீ கடைசி வரையில் ஒத்தாசை செய்ய வேண்டும். மற்றவர்கள் உனக்கு எவ்வளவு பணம் கொடுப்பதாகச் சொன்னாலும், அதைப்போல இரண்டு மடங்கு பணம் நான் உனக்குக் கொடுக்கத் தடையில்லை. என்ன சொல்லுகிறாய்? இந்த விஷயங்களில் நீ கடைசி வரையில் உறுதியாக இருப்பாயா? இருப்பேன் என்று கையடித்து எனக்கு பிரமாணம் செய்துகொடு. பஞ் சண்ணா:- ஒ தடையில்லை. பிரமாணமாக நான் தங்களுக்கே ஒத்தாசை செய்கிறேன். தாங்கள் என் பேச்சை உறுதியாக நம்பலாம்- என்று கூறி, அவரது கையில் அடித்துப் பிரமாணம் செய்து கொடுத்தான். உடனே கலியாணபுரம் மிட்டாதார் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய் விட்டார். 9-வது அதிகாரம் காளையும் - கொம்பேறி மூக்கனும் மறுநாளைய பிற்பகல் மூன்றுமணி சமயமாயிற்று. பூர்ணசந்திரோதயம் மேன்மாடத்தில் பவழக்கொடிப் பந்தலின் கீழ் போடப்பட்டிருந்த லொகுசான ஒரு ஸோபாவின் மீது உட்கார்ந்துகொண்டிருந்தாள்.