பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 161 அவ்விடத்தில் வேறே எவரும் காணப்படவில்லை. அவள் முதல் நாள் அலங்கரித்துக் கொண்டிருந்ததைக் காட்டிலும் பதின் மடங்கு சிறப்பாகவும், வசீகரமாகவும் அன்றையதினம் தன்னை அலங்கரித்துக்கொண்டு யாரோ ஒருவரது வருகையை எதிர்பார்த்தவளாய்த் தனியாக உட்கார்ந்திருந்தாள். அவள் வழக்கமாகச் செய்து கொண்டிருப்பதுபோல, புஸ்தகம் படித்தல், கிளிகளோடு கொஞ்சுதல், பலவகைப்பட்ட நூல்களினால் பூப்போடுதல், புஷ்பங்களைக் கொய்து முகர்ந்து பார்த்தல் முதலிய எந்தக் காரியத்திலும் தனது கவனத்தைச் செலுத்தாமல், ராஜபாட்டையில் ஏதேனும் வண்டி சென்றால், அது தனது மாளிகையின் வாசலில் நிற்கிறதோ என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அவளிருந்த இடம் ராஜபாட்டையின்பக்கத்தை நோக்கியதாக இருந்தாலும், அவள் அங்கே இருந்த ஜன்னல்களின் கதவுகளை மூடி வைத்திருந்தாள். அவளது மனமும் தேகமும் ஒருவிதமாக சஞ்சலமடைந்து கொண்டிருந்தன. ஆனால், அன்றையதினம் எதிர்பார்க்கும் மனிதரைச் சந்திப்பதில், அவள் அதிக இன்பத்தையோ, துன்பத்தையோ எதிர்பார்த்த வளாகக் காணப்படாவிட்டாலும், தான் அதிக திறமையா கவும் தந்திரமாகவும் நடந்து, காரியசித்தி பெற வேண்டுமே என்ற எண்ணத்தினால் அந்த அணங்கு ஒருவித மன எழுச்சி அடைந்திருந்தமையால், அவளது மனமும், உடம்பும் சலனப்பட்டு ஒருவிதமான துடிப்பைக் கொண்டிருந்தன. அப்போது அவளது பார்வை, எதிர்ப் பக்கத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தின் மீது சென்றது. மணி சரியாக மூன்று ஆகியிருந்தது. அவள் உடனே தனது ஆசனத்தை விட்டு எழுந்து பக்கத்திலிருந்த ஒரு மேஜையண்டை போய், அதன் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்துப் பிரித்து அதைப் படிக்கலானாள். ,.తా.-12