பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பூர்ணசந்திரோதயம்-1 அத்தரின் வாசனை கமழ்ந்து கொண்டிருந்த அந்தக் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: மகாராஜ ராஜேஸ்வரி மகாகனம் தங்கிய பூர்ணசந்திரோதயத் தம்மாள் அவர்கள் சமூகத்துக்கு சேரங்குளம் இனாம்தார் மிகவும் பட்சமாக எழுதிக் கொள்ளும் லிகிதம். உபய குசலம். நீங்கள் குடியிருந்துவரும் ஜெகன்மோகன விலாசம் என்ற மாளிகையை நான் நேற்றையதினம் விலைக்கு வாங்கியிருக்கி றேன். அதைத்தவிர, எனக்கு இந்த ஊரில் இன்னமும் பல வீடுகளும் சொந்தமாக இருக்கின்றன. நான் ஒவ்வொரு வீட்டுக்கும் போய்ப் பார்த்து, இன்னமும் என்னென்ன செளகரியங்களும், வசதிகளும் தேவையென்பதைப் பார்த்தும், கேட்டும் அறிந்துகொண்டு அவைகளை உடனே செய்துகொடுக்க எண்ணங்கொண்டிருக்கிறேன். தங்களைப் போன்ற தக்க குடித்தனக்காரர்கள், என்னுடைய வீடுகளில் இருப்பதை நான் நிரம்பவும் பெருமையாகவும், கண்ணிய மாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகையால், இப்போது இருப்போரைப் போகச் செய்ய வேண்டுமென்ற எண்ணமே நான் கொள்ளவில்லை. அவர்களோடு கலந்து பேசி, அவர்கள் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்களோ அவைகளை எல்லாம் உடனே பூர்த்தி செய்து கொடுத்து அவர்கள் சந்தோஷமாக இருக்கும் படி செய்ய உத்தேசிக்கிறேன். இது சம்பந்தமாக நான் தங்களோடு சில நிமிஷ நேரம் பேசும் படி தாங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். இன்றையதினம் பிற்பகல் இரண்டு மணி முதல் மூன்று மணிக்குள் நான் வந்து தங்களைக் காணலாம் என நிச்சயித்து இருக்கிறேன். -என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த பூர்ணசந்திரோதயம் அதை மடித்து மறுபடியும் முன்போல வைத்து விட்டு, 'இரண்டு முதல் மூன்று மணிக்குள் வருவதாய் நன்றாகக் குறித்து எழுதியிருக்கிறார். மணி சரியாக