பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1.65 நேரிடும். பட்சத்தில் அந்தப் பத்திரத்தை நான் தான சாசனமாக எழுதிவிட எண்ணுகிறேன். ஏனென்றால் உன்னுடைய யோக்கியதைக்கு அதுதான் சரியான மரியாதையாக இருக்கும்" என்று கூறிக் கண்சிமிட்டினார். உடனே பூர்ணசந்திரோதயம் வேடிக்கையாகப் பேசத் தொடங்கி, "சரிதான். நீங்கள் இதேமாதிரி உங்களுடைய ஒவ்வொரு வீட்டுக்கும் போய், அதில் குடியிருக்கும் மனிதர்களுக்கு எல்லாம் தான சாசனம் எழுதிக் கொடுத்து விட்டு வந்தால், உங்களுக்குச் சரியான லாபந்தான் கிடைக்கும். நீங்கள் போட்ட முதலையெல்லாம் இழந்து போவதோடு, உங்களுடைய வீடுகளுக்குப் போகும் உரிமையையும் அதில் உள்ளவர்களைப் பார்த்து அவர்களோடு பேசும் சந்தர்ப்பங்களையும் சின் ட இழந்துவிட நேருமே?' என்றாள். சேரங்குளம் இனாம்தார்:- அப்படி எல்லோருக்கும் எழுதிக் கொடுக்க எனக்கென்ன பைத்தியமா? நான் கொடுப்பதாகச் சொன்னது உனக்கு மாத்திரம்தான். ஏனென்றால் நீ மற்றவர்களைப் போல் அல்லாமல் கொடுத்தவரிடத்தில் நன்றி விசுவாசம் பாராட்டுவது அன்றி, அவர்களை விலக்கவும் மாட்டாய் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். பூர்ணசந்திரோதயம் :- நான் எப்போதும் எந்தப் பொருளையும் எனக்கு மாத்திரம் பெற்றுக்கொள்ளுகிற வழக்கமே கிடையாது. ஏனென்றால், பிறருக்கு இல்லாமல் நான் மாத்திரம் ஒன்றைப் பெற்றுக்கொண்டால், என் விஷயத்தில் பிறருக்குப் பொறாமை ஏற்படும். ஆகையால், எனக்கு மாத்திரம் செய்வதானால், தாங்கள் கனகாபிஷேகம் செய்வதானாலும், அதை நான் ஒரு திரணமாக மதித்து விலக்கக் கூடியவள். சே. இனாம் : (புன்னகையோடு) நான் உனக்கு தான சாசனம் எழுதிக் கொடுக்கும் விஷயம் பிறருக்குத் தெரிந்தால்