பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பூர்ணசந்திரோதயம்-1 அல்லவா, அவர்கள் பொறாமைப்படப் போகிறார்கள். அவர்களுக்குத் தெரியாமலேயே வாங்கிக் கொண்டால், அது சரியாகப் போகிறது. பூர்ண:- நாம் எதை மறைத்தாலும் மறைக்கலாம், ஒருவர் வழங்கிய தானதருமங்களை மாத்திரம் மறைத்து வைக்கக் கூடாது. அப்படி மறைத்து வைத்தால் கொடுத்தவர்களுக்கு இந்த உலகத்தில் புகழ் இல்லாமல் போகும். அது பலருக்குத் தெரிய வேண்டும்; அவர்கள் நல்ல கொடையாளி கொடையாளி என்று புகழ வேண்டும். அப்படிப்பட்ட வெகுஜனவாக்கு ஏற்பட்டால், இகலோகத்தில் பெருமையும் திருப்தியும் உண்டாவதோடு அடுத்த லோகத்திலும் புண்ணியம் பலிதம் ஆகும். அந்த விஷயம் இவ்வளவோடு நிற் கட்டும். நாம் இப்படி ஆசியமாகப் பேசிக் கொண்டே போனால், நீங்கள் கருதிவந்த காரியத்தைப் பேச, சாவகாசம் இல்லாமல் போய்விடும். ஆகையால், நாம் விளையாட்டுப் பேச்சைவிட்டு சாராம்சமான பேச்சைப் பேசுவோம். நீங்கள் இந்த வீட்டை நேற்றைய தினம்தான் விலைக்கு வாங்கினர்கள்போல இருக்கிறது. இதில் இன்னம் என்னென்ன செளகரியங்கள் செய்து கொடுக்க வேண்டும் என்பதைக் கேட்பதற்காக நீங்கள் இங்கே வந்ததல்லவா? சே. இனாம்: ஆம், உண்மைதான்; அதே விஷயமாகத்தான் நான் இப்போது பேசுகிறேன். உனக்கு என்னவிதமான செளகரியம் செய்து கொடுக்கலாம் என்று கேட்பதற்காக நான் இங்கே வந்தேன். வந்து உன்னை நெருங்கிப் பார்த்தவுடனே என் மனசில் ஒரு யோசனை தோன்றியது. எப்போதும் இந்த மாளிகையில் நீ இருப்பதற்குத் தக்க மேம்பாடுடையவளாக இருக்கிறாய் ஆகையால், இந்த மாளிகையை உனக்கே கொடுத்துவிட்டால், அதுதான் உன்னுடைய யோக்கியதைக் குத் தக்க செளகரியம் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆகையால்தானசாசனம் எழுதி, இந்த