பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூா கே.துரைசாமி ஐயங்கார் 167 மாளிகையையே உனக்குக் கொடுத்துவிட நினைத்து, அந்த விஷயத்தை உன்னிடத்தில் பிரஸ்தாபித்தேன். பூர்ண:- ஒகோ அப்படியா! இந்த மாளிகையில் இருப்பதற்குத் தகுந்த யோக்கியதை என்னிடத்தில் இருக்கிறது ஆகையால், நீங்கள் இதை எனக்கு தானம் செய்துவிட நினைக்கிறீர்களோ இந்த மாளிகையில் இருக்கத் தகுந்த யோக்கியதை எனக்கு இருக்கிறது என்றால், இதை விலைக்கு வாங்கத் தக்க யோக்கியதை எனக்கு இருக்கிறது என்றுதான் அர்த்தமாகும். இதை நீங்கள் ஒரு பிச்சைக்கார னுக்குக் கூட தானமாகக் கொடுத்து விடலாம். அவனும் இதில் இருக்க அருகமானவன் ஆகி விடுவான். தானமாகக் கொடுத்தால், எப்படிப்பட்டவனும் இதில் இருக்கத் தக்கவனாகி விடுவான். இதை விலைக்கு வாங்கும் யோக்கியதை யாருக்கு இருக்கிறதோ, அவன்தான் உண்மையில் இதில் இருக்கத் தகுந்தவன். ஆகையால், நீங்கள் எனக்கு இதை விலைக்குக் கொடுப்பதனால் நான் வாங்கிக் கொள்ளத் தடையில்லை. - - சே. இனாம்: நான் உன்னிடத்தில் வியாபாரசம்பந்தமாகவே வரவில்லை. உனக்கு வேண்டிய வசதிகள் செய்துகொடுக்கவும் உன்னோடு பழகி உன்னுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொள்ளவுமே நான் வந்தது. பூர்ண:- வசதிகள் என்றால், வீட்டை எனக்கே தானம் செய்து விடுவது என்று ஒருநாளும் அர்த்தமாகாது. என்னோடு பழகி என்னிடத்தில் சிநேகம் செய்யவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுவதாகச் சொல்வது மிகவும் ஆச்சரியகரமாக இருக்கிறது. என்னைப் போன்ற குடும் பஸ்திரீ உங்களைப் போன்ற அன்னிய புருஷரிடத்தில் சிநேகம் செய்வது நம் முடைய தேசத்தில் நடக்கத்தகாத விஷயமல்லவா? சே. இனாம் : ஏன் அப்படிச் சொல்கிறாய்? நம்முடைய தேசத்தில் முன்பின் பழகி அறியாத ஸ்திர் புருஷர்களுக்குள்