பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பூர்ணசந்திரோதயம்-1 சிநேகம் உண்டாவதில்லையா? நம்முடைய தேசத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து அன்னிய புருஷன் ஆசைப்பட்டுக் காதலிப்பது இல்லையா? கலியாணம் செய்து கொள்வதில்லையா? கலியாணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஸ்திரீயும் புருஷனும் அதற்குமுன் பழகினவர்க ளாகத்தான் இருக்க வேண்டுமா? பூர்ண:- ஏதேது! நீங்கள் கருதிவந்த காரியத்திற்குச்சம்பந்தம் இல்லாத புதிய புதிய சங்கதிகளை எல்லாம் எடுத்துப் பேசுகிறீர்களே முதலில் வீட்டை தானம் செய்வதாகச் சொன்னீர்கள். இப்போது அதிலிருந்து சிநேகம், காதல், கலியாணம் முதலிய விஷயங்களைப் பற்றி எனக்கு வியாக்கியானம் செய்யத் தொடங்கி விட்டீர்கள். இந்த சம் பாஷணை நம்மை எந்தெந்த விஷயத்தில் கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை. சே.இனாம்:(மகிழ்ச்சியும் புன்னகையும் கொண்டு) ஆம் நீ சொல்வது உண்மைதான்; இந்த மாளிகையிலுள்ள பெண் அரசிக்கு அருகில் வந்து தரிசனம் பெற்ற உடனே, என் மனம் பரவசம் அடைந்து தானாகவே இப்படிப்பட்ட பிரஸ்தாபங்களை எல்லாம் செய்யும்படியாகத்துண்டிவிட்டது. அதற்கு இந்தப் பெண் தெய்வத்தின் அபாரமான மகிமையே காரணமின்றி வேறல்ல. பல பல பேசுவதில் பயனென்ன? என்னுடைய மனசிலுள்ள விருப்பத்தை நான் சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிடுகிறேன். இந்த ஜெகன்மோகன விலாசத்தை மாத்திரம் உனக்குக் கொடுப்பது மரியாதைக் குறைவு. இதைப்போல இன்னம் இருபத்தைந்து ஜெகன்மோகன விலாசங்களும், ஏராளமான நிலங்களும், ஆபரணங்களும், இதர சொத்துகளும் எனக்கு இருக்கின்றன. அவைகளை எல்லாம் நான் இந்தப் பெண் தெய்வத்துக்குப் பாத காணிக்கையாக இப்போதே சமர்ப்பித்து விட்டதன்றி, என்னுடைய உடலையும், உயிரையும் கூட உன்னுடைய