பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 169 வசத்தில் ஒப்புவித்துவிட்டேன்; இனி என்னை ஆக்குவதும் அழிப்பதும் உன்னைச் சேர்ந்த பொறுப்பு. பூர்ண: (வியப்பும் திகைப்பும் கொண்டு நகைத்து) என்ன ஆச்சரியம் இது? இதற்குமுன் நீங்கள் ஜெகன்மோகன விலா சத்தை மாத்திரம் கொடுப்பதாகச் சொன்னீர்கள்; இப்போது உங்களுடைய உடல், பொருள், ஆவி முதலியவைகளை எல்லாம் கொடுத்து விடுவதாகச் சொல்லுகிறீர்கள். நாம் இதற்குமுன் ஒருவரையொருவர் கண்டறியோம். அப்படிப் பட்ட அன்னிய மனிதருக்குள் இவ்வளவு அபாரமான தான தருமம் ஏற்படுவது நான் இதுவரையில் சொப்பனத்திலும் கண்டறியாத புதுமையாக இருக்கிறதே அன்றி வேறல்ல. சே. இனாம் : (நயமாகவும் கொஞ்சலாகவும் பேசத தொடங்கி) என்ன பூர்ணசந்திரோதயம்! நான் எவ்வளவோ வெளிப்படையாகப் பேசுகிறேன். இன்னமும் என்னுடைய கருத்தை அறியாதவள் போல நீ நடித்து என் மனசை வதைக்கிறாயே; இது உனக்குதருமமாகுமா? நான் என்னுடைய சகலமான சம்பத்தையும் உடைமைகளையும் உனக்கே கொடுப்பதாகச் சொன்னால் அதற்குப் பதிலாக நான் உன்னை அடைய விரும்புகிறேன் என்பது அர்த்தமாக வில்லையா? அதை நான் வெளிப்படையாக எடுத்துச் சொல்லவேண்டுமா? பூர்ண: (முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பையும் திகைப்பையும் அடைந்து) ஒகோ நீங்கள் என்னை அமையவா விரும்புகிறீர்கள்? அந்த விருப்பம், இங்கே வந்தபிறகு ஏற்பட்டதா? அல்லது வந்ததற்கு முன்பாகவே ஏற்பட்டதா? சே. இனாம் : இங்கே வந்ததற்கு முன்பாகவே ஏற்பட்டுவிட்டது. உன்னிடத்தில் நெருங்கி எப்படிப்பேசி என்னுடைய கருத்தை வெளியிடுவதென்று யோசித்து யோசித்துப் பார்த்துக் கடைசியில் அதற்காகவே நேற்றையதினம் இரண்டு மடங்கு விலைகொடுத்து இந்த மாளிகையை வாங்கினேன்; உனக்கு வேண்டிய செளகரியங்களைச் செய்து