பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 17.3 நான் அடிக்கடி இங்கே வரவும், உன்னோடு பேசிக் கொண்டிருக்கவும் நீ இப்போது சம்மதித்தால், அதுவே போதுமானது.இந்தச் சிறிய வேண்டுகோளுக்கு நீ எப்படி யாவது இணங்கித்தான் தீரவேண்டும் ' என்று கூறிக் கெஞ்சி மன்றாடினார். பூர்ணசந்திரோதயம், " அது எப்படி முடியும்? இதற்குமுன் பழக்கம் இல்லாத புதிய மனிதர் அடிக்கடி என்னிடத்தில் வந்து பேசிப் பழகும் படி நான் விட்டிருந்தால், அதைப் பற்றி என்னுடைய வேலைக்காரர்களும், மற்ற ஜனங்களும் தவறான அபிப் பிராயம் கொள்ளுவார்கள். அது என்னுடைய கற்புக்கே தீராத ஒரு களங்கமாக வந்து சேரும். நான் உங்களோடு பழகுவதாக வைத்துக் கொள்வோம். அப்படிப் பழகியபின், உங்களுடைய குணமும் நடத்தையும் எனக்குப் பிடிக்காமல் போனால், நான் உங்களை விலக்கி விட்டு வேறே ஒரு புருஷருடைய சிநேகத்தை நாட வேண்டும். அதுவரையில் நான் உங்களோடு பழகியதைப் பற்றி எல்லோரும் தவறான அபிப்பிராயம் கொண்டு என்னுடைய கற்பைப் பற்றிச்சந்தேகம் கொள்ளுவார்களானால், யோக்கியமான வேறே எந்தப் புருஷரும் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள முன் வரமாட்டார்கள். ஆகையால், நீங்கள் கோரும் விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது' என்று உறுதியாகவும் நயமாகவும் கூறினாள். அதைக் கேட்ட சேரங்குளம் இனாம்தாரின் முகம் வாட்டம் அடைந்தது. அவர் தமது சிரத்தைக் கீழே கவிழ்த்து இரண்டொரு நிமிஷநேரம் சிந்தனை செய்தபின், நிமிர்ந்து பரிதாபகரமாக அந்த அணங்கை நோக்கி, 'அப்படியானால் இனிமேல் எப்போதாவது நான் இந்த மாளிகைக்கு வந்தால் கூட, என்னை உள்ளே விட வேண்டாமென்று நீ சொல்லி விடுவாய் போலிருக்கிறதே?" என்றார். -