பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பூர்ணசந்திரோதயம்-1 பற்றியும் தானாகக் கேட்கிறதில்லை. அவர் எதை வெளியிடுகிறாரோ அதை மாத்திரம் கேட்டுக்கொள்வான்; எதைச் சொல்லவில்லையோ, அதைக் கேட்க விரும்ப மாட்டான். அப்படிப்பட்ட விநய குணமுள்ள கோவிந்தசாமி என்ற அவரது அந்தரங்கக் காரியதரிசி புதன்கிழமை காலையில் ஜெமீந்தாருக்கு எதிரில் வந்து நின்றான். மற்ற தினங்களில் ஜெமீந்தார் நிம்மதியாகவும், நிச்சலனமாக வும் இருந்ததற்கு மாறாக அன்றையதினம் ஏதோ விஷயத்தைக் கருதி ஒருவித பதைப்பையும், அளவுகடந்த சலனத்தையும் கொண்டிருந்ததைக் கண்ட கோவிந்தசாமி ஒருவாறு ஆச்சரியம் அடைந்து திகைத்தானானாலும் அவரது வாயைப் பார்த்தவனாய் மெளனமாக நின்றான். ஜெமீந்தார் அப்போது உட்கார்ந்திருந்த விடுதிக்கு வெல் வெட்டு மாட மென்று பெயர். அது அந்த மாளிகையின் முன் பக்கத்தில் இருந்த முதல் உப்பரிகையிலுள்ள நடுமத்தியான இடம். அவரைப் பார்க்கும் பொருட்டு யாராவது வெளியிலிருந்து வந்தால், வாசலிலுள்ள மேன்மாடப் படிகளின் வழியாக ஏறிச் சென்றால், அந்தவழி அவரை நேராக வெல்வெட்டு மாடத்தில் கொண்டுபோய்விடும். அந்த மாடத்தின் சுவர்கள், நாற்காலிகள், மேஜைகள், கட்டில்கள், மெத்தைகள், தரை முதலிய பல நிறங்களைக் கொண்ட வெல் வெட்டுத் துணிகளாலேயே நிரப்பப்பட்டிருந்தமையால், கீழே நடந்தாலும், சுவர்களில் சாய்ந்தாலும், நாற் காலியில் உட்கார்ந்தாலும் எல்லா இடமும் ஒரே வழுவழுப்பாக இருந்து, அங்கே செல்வோரைப் பரம ஆனந்த சுகத்தில் ஆழ்த்தியது. அந்த மாடத்திற்குள் யாராவது நுழைந்தால் அவர்களதுதேகத்திற்கு ஏற்படும் சுகத்தினால், உணர்வு கலங்கி ஆனந்தமான தூக்கம் உண்டாகும். அந்த இடத்தில் எங்கு பார்த்தாலும் வாசனைப் புஷ்பங்கள் மலர்ந்து குலுங்கி நின்ற பூத்தொட்டிகளும், நிலைக்கண்ணாடிகளும், ஸோபாக்களும், ரதம் போன்ற கண்ணாடி விளக்குகள் முதலிய அற்புதமான