பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 179 விநோத வஸ்துக்களும் நிறைந்து மயன் என்னும் தெய்வத் தச்சனால் நிர்மானம் செய்யப்பட்ட மனமோகன மணி மண்டபமோ எனக் காண்போர் ஐயுறத்தக்கதாக இருந்தது. அந்த வெல்வெட்டு மாடத்தின் முன்பக்கத்து வாசலிற்கு எதிரில் ரகசியமான இன்னொரு வாசல் இருந்தது. அந்த வாசலைத் திறந்து கொண்டு உள்ளே சென்றால், அவ்விடத்தில் அவரது ரகசியமான ரதிகேளி விலாச மண்டபம் இருந்தது. அவரையும், கோவிந்தனையும் தவிர, வேறு எவரும் அந்த ரதிகேளி விலாசத்திற்குள் சென்று அறியார்கள். பரம ரகசியமாக அமைக்கப்பட்டிருந்த அந்த விநோத சயனக் கிருகத்தின் அமைப்பையும் அலங்காரத்தையும் விவரமாக வர்ணிக்கும் சந்தர்ப்பம் பின்னால் ஏற்படும் ஆதலால், இப்போது அதை விடுத்து மேல் விஷயத்தை நாம் கவனிப்போம். மேலே குறிப்பிட்ட வெல்வெட்டு மண்டபத்தில் வெகு லொகுலாக அமைக்கப்பட்டிருந்த வழுவழுப்பான ஒரு லோபா வின் மீது ஜெமீந்தார் எப்போதும் உட்கார்ந்திருப்பார். அந்த ஸோபாவில் மறைவான இரண்டு இடங்களில் இரண்டு பொத்தான்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பொத்தான்களுள் ஒன்றை அழுத்தினால், அந்த உப்பரிக்கையின் கீழேயுள்ள ஓர் அறையில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மணியை அது அசைக்கும். அந்த மணி உடனே கிணுகினுவென்று அடித்துக்கொள்ளும். அவ்விடத்தில் எப்போதும் ஆயத்தமாகக் காத்திருக்கும் சேவகர்கள், ஜெமீந்தார் தங்களை அழைப்பதாக நினைத்து உடனே எழுந்து விரைவாக வந்து ஜெமீந்தாருக்கு எதிரில் நிற்பார்கள். அதுபோல, இரண்டாவது பொத்தானை அழுத்தினால், அந்த விசை வெல்வெட்டு மாடத்திற்குப் பக்கத்திலுள்ள கோவிந்தனது இருப்பிடத்தில் போய், அங்கே உள்ள மணியை அசைக்கும். அவன் உடனே எழுந்து ஜெமீந்தாரிடத்திற்கு வருவான். ஆனால், ஜெமீந்தார் பொத்தானை அழுத்துவதும், மணி ஓசை செய்வதும்