பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பூர்ணசந்திரோதயம்-1 வெல்வெட்டு மண்டபத்தில் அவரோடுகூட இருப்பவருக்குத் தெரியாமல் இருக்கும். ஆகவே, ஜெமீந்தார், சமயத்துக்குத் தகுந்தபடி அந்தப் பொத்தான்களை உபயோகித்து கோவிந்தனையோ, மற்ற வேலைக்காரரையோ அழைத்துத் தமது குற்றேவல்களை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம். அவர் புதன்கிழமையன்று காலையில் எழுந்து தமது ஸ்நானம், சிற்றுண்டி முதலியவற்றை முடித்துக்கொண்டு தமது வழக்கப்படி பகட்டாக அலங்காரம் செய்து கொண்டனர். முதல் நாள் இரவு முற்றிலும் பன்னீரில் ஊறப்போட்டு வைக்கப்பட்டிருந்த தமது கட்டுப்பல்லை எடுத்து அவர் தமது பொக்கை வாயைச் சரிப்படுத்திக் கொண்டார்; மீசைமயிர், தலைமயிர் முதலியவற்றிற்கு கறுப்புச்சாயம் ஏற்றி, தைலம், அத்தர் முதலியவைகளால் மெருகும் வாசனையும் கொடுத்துக் கொண்டார்: வைரக் கடுக்கன்கள், நவரத்ன மோதிரங்கள், தங்க மூக்குக்கண்ணாடி முதலியவற்றை அணிந்து கொண்டார். வைரங்கள் பதிக்கப்பட்டதங்கச்சங்கிலியுள்ளகைக்கடிகாரத்தை எடுத்து மார்பில் சொருகிக் கொண்டார்; பட்டும் ஜரிகையும் நிறைந்த துல்லியமான ஆடைகளைத் தரித்துக் கொண்டார்; உரலில் இடிக்கப்பட்ட வெற்றிலை, பாக்கு, வாசனைத் திரவியங்கள் முதலியவற்றின் துகையலை வாயில் போட்டு மென்றுகொண்டு வாயில் சிவப்பு நிறம் நன்றாகப் பற்றி இருக்கிறதா என்று அடிக்கடி தமது முகத்தை நிலைக் கண்ணாடியில் பார்த்துத் திருப்தியடைந்தவராய், ஸோபாவின் பக்கத்தில் இருந்த பொத்தானை அழுத்த, முன் சொல்லப்பட்டபடி அவரது அந்தரங்க காரியதரிசியான கோவிந்தன் வந்து நின்றான். அவனைக் கண்ட ஜெமீந்தார், 'கோவிந்தா முக்கியமான சில சங்கதிகள் உன்னிடத்தில் சொல்லவேண்டும். அதற்காகத்தான் நான் உன்னை வரவழைத்தேன்' என்றார். கோவிந்தன் வணக்கமாக நின்று, 'என்ன சங்கதி? சொல்லுங்கள்' என்றான்.