பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 181 ஜெமீந்தார்: இன்றைய தினம் முழுதும் நான் இந்த மா டத்திலேயே இருக்கப் போகிறேன். என்னைப் பார்ப்பதற்கு இன்றைய தினம்யார் வந்தாலும் சரி, எவ்வித ஆட்சேபனையும் சொல்லாமல், அவர் யார் என்பதைக் கேட்காமல், அவரை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வரவேண்டும். அப்படி வருகிறவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பெரிய மனிதராக இருந்தாலும் சரி, பிச்சைக் காரனாக இருந்தாலும் சரி, அவரிடத்தில் எவ்விதமான பேச்சும் கொடுக்காமல் அவரை என்னிடத்தில் அனுப்பிவிட வேண்டும் தெரிகிறதா? கோவிந்தன்: ஒ1தெரிகிறது. அப்படியே செய்யச் சொல்லுகிறேன். ஜெமீந்தார்: இதோ எனக்குப் பக்கத்தில் ரோஜாப்பூக்கள் நிறைந்துள்ள இரண்டு பூத் தொட்டிகள் இருக்கின்றன அல்லவா. இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிஸ்டலை மறைத்து வைக்க வேண்டும். இரண்டு பிஸ்டலும் தோட்டாக்கள். போடப்பட்டு, வெடிப்பதற்கு ஆயத்தமானவையாக இருக்க வேண்டும். சுலபத்தில் எடுக்கும்படி அவைகளின் கைப்பிடிகள் மேலே இருக்கவேண்டும். பிஸ்டல் இருக்கிறது என்பது வெளியில் தெரியாதபடி ரோஜாப் புஷ் பச் செண்டுகளை அவற்றின்மேல் வைத்து மூடி வைக்க வேண்டும். தெரிகிறதா? கோவிந்தன்: (வியப் போடு) கிட்டிக்கப்பட்ட பிஸ்டல் களையா அப்படி மறைத்துவைக்கச் சொல்லுகிறீர்கள்? ஜெமீந்தார்: ஆம்.ஆம். பிஸ்டல்களைத்தான். தோட்டாக்கள் அல்லாமல் வெறும் பிஸ்டல்களை வைத்துவிடப் போகிறாய்; ஜாக்கிரதை, அதிலிருந்து எனக்கு ஏதாவது பெருத்த அபாயம் நேருமோ என்று நீ கொஞ்சமும் பயப்படவேண்டாம். நான் இன்றைய தினம் எதிர்பார்க்கும் மனிதர் ஒருவேளை மூர்க்கத்தனமாக நடந்துகொண்டால், அப்போது உபயோகப் படுத்தலாம் என்ற கருத்தோடு அவைகளை வைக்கச்