பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பூர்ணசந்திரோதயம்-1 சொல்லுகிறேன். வேறொன்றும் இல்லை. அதைப் பற்றி நீ கொஞ்சமும் யோசிக்க வேண்டாம். கோவிந்தன். சரி; உத்தரவுப்படியே வைக்கிறேன். ஜெமீந்தார்: அவைகள் மாத்திரமல்ல. நீ இன்னும் சில காரியம் செய்யவேண்டும். யாராவது மனிதர் என்னிடத்தில் வந்து பேசிக் கொண்டிருந்தால், நீ இருக்கும் அறையின் ஜன்னலில் படுதாவை விட்டு ஜன்னலை மூடிவிடவேண்டும். ராஜபாட்டையிலிருந்து உன்னுடைய அறையின் ஜன்னலைப் பார்த்தால், அது படுதாவினால் மூடப்பட்டிருக்கிறது என்பது வெளியில் இருப்போருக்குத் தெரியவேண்டும். நீ ஜன்னலின் படுதாவை மூடிவிட்டு அந்த அறையை விட்டு எங்கேயும் போகாமல் அவ் விடத்திலேயே இருக்க வேண்டும். உன் அறையிலிருக்கும் மணி ஒருதரம் அடித்தால், நீ உடனே அந்தப் படுதாவை விலக்கிவிட வேண்டும்; தெரிகிறதா? கோவிந்தன். ஓ! நன்றாகத் தெரிகிறது. ஜெமீந்தார்: ஆனால், உன்னுடைய அறையிலுள்ள மணி இரண்டுதரம் அடித்துக்கொண்டால், நீ உடனே புறப்பட்டு அவசரமாக என்னிடத்திற்கு வரவேண்டும். நீ இங்கே வருவதில் கொஞ்சமும் தாமசம் ஏற்படக்கூடாது. இப்போது நான் சொன்னவைகளை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயா? கோவிந்தன்: அப்படியே! அப்படியே! ஜெமீந்தார்: சரி; அவ்வளவுதான் நீ செய்யவேண்டியது. நீ போய் வாசல் காப்போனிடம் சொல்லி, உள்ளே வரும் மனிதர் யாராக இருந்தாலும் தடுக்காமல் விடும்படி சொல்லிவிட்டு வந்து உன்னுடைய அறையில் போய் இரு. நமக்கு வேண்டிய ஆகாரங்களை எல்லாம். அந்தந்தக் காலத்தில் இங்கேயே கொண்டுவந்து வைத்துவிடும்படி பரிசாரகனிடத்தில் சொல்லி வைத்துவிடு - என்றார். -