பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 - பூர்ணசந்திரோதயம்-1 கடிதத்தின் மூலமாக எழுதி முன்னதாகவே அனுப்புவது வழக்கம். அதுவுமின்றி, அந்த ஜெமீந்தாரையும் தங்களது வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு வரும்படியாகஅழைப்பு தற்கும் சில கடிதங்கள் வருவது உண்டு. ஒவ்வொரு நாளிலும் சராசரி அவரைப் பார்க்க பத்து நண்பராவது வருவர். ஆனால், அன்றைய தினம் அத்தனை கடிதங்கள் வந்ததைக் கண்ட ஜெமீந்தார் மிகுந்த கவலை கொண்டு அன்றை யதினம் தமது மாளிகைக்கு எவரும் வராமல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டவராய் அந்தக் கடிதங்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவரால் படிக்கப்பட்ட முதல் கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது மகாகனம் பொருந்திய பெரியப்பா அவர்களுடைய பொற்பாத கமலங்களில் அடியாள் லீலாவதி அநந்தமான தெண்டன் சமர்ப்பித்து எழுதிக்கொள்ளும் விக்ஞாபனம்; உபயrேமம். - இந்தக் கடிதத்திலுள்ள என்னுடைய எழுத்தைப் பார்க்க உங்களுக்கு நிரம் பவும் ஆச்சரியம் உண்டாகும் என்றே நான் நினைக்கிறேன். அதோடு நான் இந்த ஊருக்குத் திரும்பி வந்து விட்டேன் என்ற செய்தியைக் கேட்பது உங்களுக்கு வியப்பாகவே இருக்கும். நான் சென்ற ஞாயிற்றுக் கிழமை சாயுங்காலம் இந்த ஊருக்கு வந்தேன்; வந்தவள் வெளியில் போய் யாரையும் பார்க்காமல் மறைவாக இருக்கிறேன். அதன் காரணத்தை நீங்கள் எளிதில் யூகித்துக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன். நாளைய தினமாகிய புதன்கிழமை பகல் 12 மணிக்கு நான் வந்து உங்களைப் பார்த்துவிட்டுப் போக உத்தேசித்து இருக்கிறேன். அப்போது நான் உங்களிடத்தில் மிக வும் முக்கியமான சில விஷயங்களைக் குறித்துப் பேசவேண்டி யிருக்கிறது. ஆகையால், நீங்கள் அவசியம் ஜாகையில் இருக்க வேண்டுமாய் மிகவும் பணிவாகக் கேட்டுக்